Breaking News

ஜெய்லானியில் தொல்பொருள் அகழ்வுப்பணிகள் விரைவில் ஆரம்பம்

இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள கூரகல, ஜெய்லானி புனித பூமி பிரதேசத்தில் தொல்பொருள் அகழ்வுப்பணிகளை மேற்கொள்வதற்கு தொல்பொருள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் குறித்த அகழ்வுப்பணிக்கு முன்னதாக அப்பிரதேசத்தில் உள்ள சட்டவிரோத கட்டடங்கள் மற்றும் நிர்மாணங்களை அகற்ற அத்திணைக்களம் தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும் இப்பிரதேசத்தில் உள்ள சட்டவிரோத குடியிருப்பாளர்களை அங்கிருந்து வெளியேறுமாறு திணைக்களம் அறிவித்துள்ளதாக அறியமுடிகிறது.

அண்மையில் குறித்த பிரதேசத்துக்கு விஜயம் செய்திருந்த பாதுகாப்பு செயலாளர் ஜெய்லானி பள்ளிவாசல் எக்காரணம் கொண்டும் அகற்றப்படாது என தெரிவித்திருந்ததுடன் முஸ்லிம்களின் வழிபாடு தொடர்பிலும் இடையூறுகள் ஏற்படுத்தப்படாது என உறுதியளித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

.

நன்றி : விடிவெள்ளி

No comments