பர்மாவின் ரோஹிங்கிய முஸ்லீம்கள் மீது எமது உணர்வுகள் பொங்கி வழியும் நேரம்... (ஒரு Facebook பதிவு)
(ஒரு சகோதரரின் Facebook பதிவு)
எமது ஈமானிய உறவுகள் உலகின் எங்கோ ஒரு மூலையில் பாதிக்கப்படும் போது எமக்கு இங்கு வலிக்க வேண்டும், இவன் தான் முஸ்லிம். ஆனால் எனக்கு வலிக்கிறது என்று சொல்லிக் காட்ட வேண்டுமா..? இது தான் எனது கேள்வி?
கடந்த சில நாட்களாக ரோகிங்கியா பற்றிய உணர்வலைகள் சமூக ஊடகங்களில் நிறம்பி வழிகின்றது. எந்த அளவுக்கு என்றால், அளுத்கம கலவரத்தின் போது கூட இலங்கை முஸ்லிம்கள் இந்த அளவுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்தியதில்லை என நிணைக்கிறேன். பல முறை நான் பொது போக்குவரத்து சேவைகளில் பயனிக்கின்ற போது கைபேசியில் Facebook ஐ பார்க்க எடுத்து Wall இல் ஒரு சில பதிவுகளை பார்த்ததும் அப்படியே கைபேசியை மீண்டும் பைக்குள் போட்டுக்கொண்டுள்ளேன். இரண்டு காரணங்கள், ஒன்று சில அவற்றை சாதாரனமாக பார்க்க முடியாது, உள்ளம் வெந்து விடுகின்றது, இரண்டாவது, பக்கத்தில் உள்ள எமது மாற்று மத சகோதரர்கள்.
நான் இப்படிச் சொன்னதும் இதெல்லம் ஒரு சிக்கலா, நாம் பொய்யைச் போடவில்லை தானே. அவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் தானே என என்னிடம் ஆயிரம் கேள்விகள் கேற்க உங்களுக்குத் தோன்றலாம்.
பலர் தமது உணர்வுகளை வெளிக்காட்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்தினாலும், அதில் அடுத்தவர்களின் உணர்வுகளை மதிக்கத் தவறி விடுகின்றனர். ஒரு Smart Phone, Data Card இது இரண்டும் கையில் இருந்தால் அதனை எனக்கு வேண்டிய மாதிரி பயன்படுத்தலாம் என்று நிணைத்து விடுகின்றனர்.
ஓரிரு தினங்களுக்கு முன்னர் ஒரு பெரும்பான்மை சகோதரி (சமூக தளங்களில் சற்று செல்வாக்குள்ள ஒருவர்) தனது Facebook குறிப்பில் இப்படி குறிப்பிட்டிருந்தார். “මියෙන්මාරයේ බෞද්ද ත්රස්තවාදයක් තියෙනවා කියලා අපේ රටේ මුස්ලිම් මිනිස්සු මෙච්චර තප්පුලන්නේ ඇයි. ?
අපි කවුරුත් ඒක හොද වැඩේ කියලා කිව්වෙම නැහැනේ . එහෙම කියවා ගන්නද මේ හදන්නේ .
ලෝකේ වැඩිපුරම මරා ගන්නෙම මුස්ලිම් ජාතිකයෝ .
ඔවුන් මරන්නෙත් ඔවුන්ගේ අගමේම අය අපි ඒ සියල්ලටම විරුද්ද වෙද්දී මේ අය මොකාටද මේ එන්න හදන්නේ ?
බෞද්ද රටක ඉන්න බය නම් මුස්ලිම් රටකට ගිහින් බය නැතුව සතුටින් ඉන්න පුළුවන්නේ ..........."
(மியன்மாரில் பௌத்த பயங்கரவாதம் உள்ளது என்று எங்கள் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் இவ்வளவு கொக்கரிப்பது ஏன்?
நாம் யாரும் அது ஒரு நல்ல விடயம் என்று சொல்ல வில்லையே. அப்படிச் சொல்ல வைக்கவா போகின்றீர்கள்.
உலகில் அதிகமாக அடித்துக்கொண்டு சாவது முஸ்லிம்கள்.
அவர்கள் கொள்வது அவர்களுடைய மதத்தையே சேர்ந்தவர்களை, நாம் அவை அனைத்தையும் எதிர்க்கும் போது இவர்கள் எதற்கு வருகிறார்கள்?
ஒரு பௌத்த நாட்டில் இருப்பதற்கு பயம் என்றால் முஸ்லிம் நாடொன்றுக்குச் சென்று பயம் இன்றி வாழலாமே...) இந்த பதிவை இட்ட சகோதரி சமூக ஊடகங்களில் இனவாதம் பேசிய ஒருவரல்ல, மாறாக பல தடவைகள் முஸ்லிம்கள் சார்பில் நியாயங்களையும் பேசிய ஒருவர். என்றாலும் இன்று அவரை இவ்வாறு பேசச் செய்தது யார்? இதை நாம் சிந்தித்தே ஆக வேண்டும்.
மேலும் சில சகோதரர்கள் மியன்மார் தொடர்பில் எவ்வித ஆறிவும் இல்லாமல் கண்டதை எல்லம் Share செய்து வருகின்றனர், சிரியாவில் நடந்த கொடுமைகளின் படங்கள், இலங்கையில் யுத்தகாலத்தில் எடுக்கப்பட்ட படங்கல் என்று கண்டதையெல்லாம் சற்றும் சிந்திக்காமல் பகிர்கின்றனர். போதாமைக்கு தமது Wall இல் Public ஆகவே இவற்றை பதிகின்றன. இன்னும் சிலர் Change.orgதளத்தில் சென்று ஆளுக்கு ஒரு petition ஐ தயார் செய்து அதற்கு ஆதரவு தேடி சமூக ஊடகங்களில் அழைகின்றனர்.
ரோகிங்கிய உறவுகளுக்கு தேவை உங்கள் Facebook Like களோ அல்லது அனுதாப Comment களோ அல்ல. இப்போதைக்கு உங்கள் துஆக்கள் மட்டுமே. உங்கள் Facebook Post இற்கு முன்னர் நீங்கள் அவர்களுக்காக துஆ கேளுங்கள்.
பாதிக்கப்பட்ட எங்கள் சகோதரனின் இரத்தத்தை உங்கள் சமூக வலைத்தல பிரபல்யத்திற்காக விற்க வேண்டாம். ஒரு ரோகிங்கியாவுக்கு ஆதரவளித்து இன்னொரு ரோகிங்கியாவை உருவாக்க விதை போட வேண்டாம். வேகத்திற்கு முன்னர் விவேகத்தை முன்னிருத்துங்கள்.
(03.09.2017)
Post Comment
No comments