ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது கொடூர தாக்குதல்கள்

நூற்றுக்கும் மேற்பட்டோர் பரிதாபகரமாக பலி
ஆயிரக்கணக்கானோர் காடுகளுக்குள் தஞ்சம்
அகதிகளை ஏற்க பங்களாதேஷும் மறுப்பு தெரிவிப்பு
மியன்­மாரில் வாழும் சிறு­பான்மை ரோஹிங்யா முஸ்­லிம்கள் மீது அந்­நாட்டு இரா­ணு­வத்­தினர் கடந்த சில நாட்­க­ளாக கண்­மூ­டித்­த­ன­மான தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றனர். இதில் சிக்­குண்டு நூற்­றுக்கும் மேற்­பட்டோர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன்  ஆயி­ரக்­க­ணக்­கானோர் பங்­க­ளா­தேஷில் அடைக்­கலம் கோரி தஞ்­ச­ம­டைந்­துள்­ளனர். எனினும் நேற்று பங்­க­ளா­தேஷும் ரோஹிங்­யாக்­களை திருப்­பி­ய­னுப்­பி­யுள்­ள­தாக சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புகள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன.
ராக்கைன் மாநி­லத்தில் ஒடுக்­கப்­பட்டு வரும் ரோஹிங்யா முஸ்­லிம்­களை பயங்­கர ஆயு­தங்­களால் மியன்மார் இரா­ணுவம் கொன்­றொ­ழித்து வரு­வ­தாக ரோஹிங்­யாக்­க­ளுக்­காக குரல் கொடுக்கும் மனித உரிமை அமைப்­புகள்  குற்றம் சுமத்­தி­யுள்­ளன. இந்த தாக்­கு­தல்­களில் சிக்கி உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்கை 100ஐத் தாண்­டி­யுள்­ள­துடன் பல நூறு பேர் பாரிய வெட்டுக் காயங்­க­ளுக்கும் இலக்­கா­கி­யுள்­ளனர்.
அகதி முகாம்கள் உள்­ளிட்ட ரோஹிங்யா முஸ்­லிம்­களின் இருப்­பி­டங்கள் இரா­ணு­வத்­தி­னரால் தீ வைக்­கப்­பட்டு அழிக்­கப்­பட்­டுள்­ள­துடன் அங்­கி­ருந்து பங்­க­ளா­தேஷை நோக்கி காடுகள், ஆறுகள் வழி­யாக தப்­பி­யோ­டிய ஆயிரக் கணக்­கான முஸ்­லிம்கள் மீது மியன்மார் இரா­ணு­வத்­தி­னரும் ஆயுதந் தாங்­கிய குழுக்­களும் மோட்டார் குண்­டு­களை வீசித் தாக்­குதல் நடத்­தி­ய­தாக  பங்­க­ளாதேஷ் எல்லைக் காவல் படை­யினர் அல் ஜஸீ­ரா­வுக்குத் தெரி­வித்­துள்­ளனர்.
கடந்த வெள்­ளிக்­கி­ழமை அதி­காலை பொலிஸ் காவ­ல­ரண்கள் மீது ரோஹிங்யா ஆயுத குழு­வினர் தாக்­குதல் நடாத்­தி­ய­தா­கவும் இதற்கு பதி­ல­டி­யா­கவே  இரா­ணுவம் பதில் தாக்­குதல் நடாத்தி வரு­வ­தா­கவும் மியன்மார் அரச தரப்பு தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.
இந்த தாக்­குதல் நட­வ­டிக்­கை­க­ளின்­போது சுமார் 10,000 ரோஹிங்யா முஸ்­லிம்கள் இருப்­பி­டங்­களை விட்டும் துரத்­தி­ய­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.
 பள்­ளி­வா­யல்­களும் இஸ்­லா­மிய கல்வி நிலை­யங்­களும் இரா­ணு­வத்­தி­னரால் தீ வைத்து அழிக்­கப்­பட்­டுள்­ளன.
இரா­ணு­வத்­தினர் வீடு­க­ளுக்குள் புகுந்து சொத்­துக்­களை சூறை­யா­டு­வ­தா­கவும் நாட்டை விட்டு வெளி­யேற நிர்ப்­பந்­திப்­ப­தா­கவும் ரோஹிங்யா முஸ்­லிம்கள் தெரி­விக்­கின்­றனர்.
மியன்மார் அரசு இது தொடர்பில் எது­வித காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்­காது இனச்­சுத்­தி­க­ரிப்­புக்கு மறை­மு­க­மாக ஆத­ரவு வழங்­கு­வ­தாக மனித உரிமை ஆர்­வ­லர்கள் கருத்துத் தெரி­விக்­கின்­றனர்.
இரா­ணு­வத்தின் அட்­டூ­ழி­யங்கள் தாளாது, தங்­க­ளது இருப்­பி­டங்­களில் இருப்­ப­தற்கு அஞ்சி முதுகில் மூட்­டை­க­ளையும் கையில் குழந்­தை­க­ளையும் சுமந்த வண்ணம் காடு­க­ளிலும் வயல் வெளி­களில் ரோஹிங்யா முஸ்­லிம்கள் தஞ்சம் புகுந்­துள்­ளனர். இது தொடர்­பி­லான வீடியோ காட்­சிகள் சமூக வலைத்­த­ளங்­களில் வேக­மாக பரவி வரு­கின்­றன.
கடந்த வருடம் ஒக்­டோபர் மாதம் எல்லைக் காவ­லரண் தாக்­கு­தலில் 9 பொலிசார் ரோஹிங்யா ஆயு­த­தா­ரி­களால் கொல்­லப்­பட்­ட­தாக குற்­றம்­சாட்டி ஆங்சாங் சூகி அரசு ராக்கைன் பிர­தே­சத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான இரா­ணுவ துருப்­புக்­களை நிறு­வி­யது. இந்த இரா­ணுவ துருப்­புக்கள் ராக்கைன் பகு­தி­களில் வாழும் ரோஹிங்யா முஸ்­லிம்கள் மீது கற்­ப­ழிப்பு, சொத்­துக்­களை சூறை­யா­டுதல், தீ வைத்தல் என மனி­தா­பி­மா­ன­மற்ற வகையில் அட்­டூ­ழி­யங்­களை செய்து வரு­கின்­றன. இவர்­களின் கொடுமை தாளாது 87,000 ரோஹிங்யா முஸ்லிம்கள்  பங்களாதேஷ் நாட்டில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
மியன்மார் அரசின் ஆதரவில் மேற்படி இராணுவ அட்டூழியங்கள் இடம்பெறுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் ராக்கைன் பகுதியில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா விசாரணைகளை மேற்கொள்ள மியன்மார் அரசு தொடர்ந்தும் மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments