மத மோதல் விவகார பொலிஸ் படை – கட்டளைத் தளபதி ஞானசாரா தேரர்?
நமது நாட்டில் பொலிஸ் படையொன்று இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அண்மையில் பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசாரத் தேரர் தலைமையில் இந்த நாட்டில் உத்தியோகப்பற்ற பொலிஸ் படையொன்றும் சுதந்திரமாக அதிரடி நடவடிக்கைளில் ஈடுபட்டு வருவது இந்த நாட்டு மக்களும் சர்வதேச சமூகமும் நன்கு அறிந்து வைத்திருக்கின்றது. எனவே ஞானசாரர் படை இந்த நாட்டில் இயங்கும் இரண்டாவது காவிப் பொலிஸ்.
இதுவும் போதாது என்று அரசு மத விவகாரங்களைக் கையாள்வதற்கு மற்றுமொரு பொலிஸ் பிரிவை புதிதாக உருவக்கி இருக்கின்றது. எனவே அந்தப் பொலிஸ் பிரிவின் ஆளணயின் எண்ணிக்கை வெறும் ஏழு பேர் என்பது அடுத்த வேடிக்கை!
இந்தப் பொலிஸ் படை தொடர்பாக எமக்குள்ள சந்தேகங்கள் சிலவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றுகின்றது. இந்த பொலிஸ் படையின் கட்டளைத் தளபதி கலபொட அத்த ஞானசாரா தேரராக இருக்கக் கூடும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். தனது வேண்டுகோளுக்கமையத்தான் இந்தப் படை அமைக்கப்பட்டாதாக அவர் பகிரங்கமாகக் கூறி இருக்கின்றார். அத்துடன் மூன்று வருடங்களுக்கு மேல் இந்த விNஷட படையை வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்;றும் அவர் அடிக்கடி கூறிவிருகின்றார். இவை எல்லாம் அரசு தீர்மானிக்க வேண்டிய விவகாரங்களாக இருக்கம் போது இந்த விNஷட பொலிஸ் படை பற்றி இவர் இப்படி எல்லாம் பேசுவதைப் பார்க்கும் போது நிச்சயம் இந்தப் பொலிஸ் பிரிவின் கட்டளைத் தளபதியாக ஞானசாரர்தான் வேலை பார்ப்பார் என்று தெரிகின்றது.
இந்த பொலிஸ் பிரிவை தோற்றுவித்து சில நிமிடங்களில் சிங்கள ராவய அமைப்பின் சார்பில் தவ்ஹீத் அமைப்பிற்கு எதிரான முறைப்பாடு அந்தப் பொலிஸ் பிரிவில் பதியப்பட்டிருக்கின்றது. இதே பாணியில் அசாட்சாலி தனது தரப்பில் முஸ்லிம்களுக்கெதிரான மேற் கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக 284 முறைப்பாடுகளை இந்தப் பிரிவில் பதிந்திருக்கின்றார். இது பற்றி கேள்விப்பட்ட ஞானசரர் அசாட் சாலிக்கு அப்படி ஒட்டு மொத்தமாக முறைப்பாடுகளைக் கொடுக்க முடியுமானால் 3000ம் பக்கங்களுக்கும் மேற்பட்ட பங்கங்களை கொண்ட முறைப்பாடுகளை முஸ்லிம்களுக்கு எதிராக எங்களால் இந்த பொலிஸ் பிரிவில் தாக்கல் செய்ய முடியும் என்று எச்சரித்து இருக்கின்றார். இந்த செய்தியை எழுதுகின்றபோது இந்த மதப் பொலிசுக்கு இதுவரை 302 முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றது.
சில தினங்களுக்கு முன்னர் விஷேட பொலிஸ் படை தொடர்பான தொலைக் காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கு கொண்டிருந்த அசாட் சாலியிடம் பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலபொட அத்த ஞானசாரத் தோரர் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு இலங்கையில் தீவிரவாத முஸ்லிம் சமய அமைப்புக்கள் இருக்கின்றது என்ற தகவல் சொன்னது உங்களுடைய சகோதரர் ரியாஸ் சாலியும் மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானவும் தானே என்று வினா எழுப்பினார்.
இதற்கு சாலி என்ன சொன்னார் என்று பார்ப்போம், இன்று கலபொடஅத்த ஞானசாரத் தோரர் மிகவும் நிதானமாகவும் மரியாதையாகவும் வார்த்தைகளை வெளியிடுகின்றார். அவர் இப்படி நாகரிகமாக பேசினால் நான் எங்களுடைய ஆட்களையும் அழைத்துக் கொண்டு சென்று தேரருடன் பேசிப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்று ஞானத்தாருக்கு நிகழ்ச்சியில் சான்றிதழ் கூட வழங்கினார் சாலி.! ஞானத்தின் கேள்விக்கு சாலி பதில் இது…!
அசாட் சாலி தரப்பில் தற்போது 284 முறைப்பாடுகள் ஞாசாரர் சார்பில் 3000ம் பக்கங்களைக் கொண்டு முறைப்பாடுகள் என்று அறிவிக்கப்படுகின்றது. எனவே இப்படிப் பார்க்கின்ற போது இந்த பொலிஸ் பிரிவு கேலிக்ககூத்து என்ற நிலை இருக்கின்றது.
ஒருவேளை பௌத்த நலன்களைப் பாதுகாப்பதற்காக விNஷடமாக இந்தப் பொலிஸ் பிரிவு தோற்றுவிக்க பட்டிருக்குமோ என்ற சந்தேகமும் எழுகின்றது. கலபொட ஞானத்தார் இந்த பொலிஸ் பிரிவு இரண்டு மூன்று வருடங்களுக்கு இயங்கினால் போதுமானது என்று வேறு காலக்கேடு நிர்ணைத்திருக்கின்றார். அந்த காலக் கேடுவிற்குள் அவர்கள் எதிர்பார்க்கின்றவற்றை சாதித்து விடலாம் என்று ஞானத்தார் நினைக்கின்றார் போலும். அவர் கூற்றுக்களையும் கதைகளையும் பார்க்கும்போது மதவிவகார பொலிஸ் என்பது அவர் ஏற்பாடோ என்று எண்ணத் தோன்றகின்றது. அப்படியானால் இந்தப் பொலிஸ் பிரிவுக்கும் உத்தியோகப்பற்றற்ற தலைவரும் அவர்தானோ என்னவோ?
தனது பாதுகாப்பிற்கு துப்பாக்கியும் 50 தோட்டக்களும் தேவை என்ற அவர் ஒரு முறை கேட்டிருந்தார் இது அவரின் காவிப் படைக்கா அல்லது தற்போது அமைக்கப்பட்டுள்ள மதப்படைக்கா என்று தெரியவில்லை.
இந்தப் பொலிஸ் பிரிவின் சட்டரீதியான அந்தஸ்த்துத் தொடர்பாக சட்டத்தரணிகள் சங்கமும் கேள்விகளை எழுப்பி இருக்கின்றது. பொலிஸ் தனக்கென தனியான திணைக்களத்தின் ஊடாக செயலாற்றுகின்ற போது தற்போது அமைக்கப்பட்டுள்ள மதப் படை பௌத்த விவகார அமைச்சின் கீழ் எப்படி தனது கடமைகளை முன்னெடுக்க முடியும் என்று அவர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றார்கள்.
No comments