Breaking News

அருந்திக எம்.பி.யை இரகசிய பொலிஸார் விசாரிக்க வேண்டும் – ஹரின் பெர்னாண்டோ

Harin Fernandoஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோவை இரகசிய பொலிஸ் பிரிவில் வைத்து விசாரணை செய்ய வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெரின் பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட பிரான்ஸில் வசித்து வருவதாக நாடாளுமன்றத்தில் கூறியதை அடுத்தே ஹரின் பெர்னாண்டோ இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தேசிய தோட்டத் தொழிலாளர் ஒன்றிய வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்த பகிரங்க வேண்டுகோளை விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போய் நீண்டநாட்கள் ஆகியுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு ஒரு கருத்தொன்றை முன்வைப்பது நாட்டில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கு அரசாங்கம் பொறுப்பு கூறியே ஆகவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஊடகவியலாளர் எக்னெலிகொட இருக்கும் இடம் தெரிந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments