என் கணவரை என்னிடம் கொண்டுவந்து தாருங்கள் – சந்தியா எக்னெலிகொட
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட பிரான்ஸில் வசித்து வருகிறார் என்றால் அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரச் செய்யுமாறு அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் கூறியதைப் போல, எனது கணவர் பிரான்ஸில் வசித்து வருகிறார் என்றால் அவரை என்னிடம் கொண்டுவந்து தருமாறு ஜனாதிபதியிடமும் சபாநாயகரிடமும் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய (06) ஊடகவியலாளர் சந்திப்பின் போதும் இதுகுறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியொன்றை எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் கூறிய கருத்து தொடர்பாக ஆராய்வதாகவும், பிரகீத் எக்னெலிகொட குறித்த விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
No comments