பெண் விவகாரத்தால் பொது பல சேனாவுக்குள் அடி தடி யுத்தம்..!
பொது பல் சேனாவின் அழைப்பாளர் விதாரன் தெனியே நந்த தேரர் மற்றும் பொது பல சேனாவின் உயர்பீட உறுப்பினர் டிலந்த விதானகேயிற்கும் இடையே அடிதடிப் போரொன்று இடம்பெற்றுள்ளதாக பொது பல சேனாவின் உள்ளிருந்து செய்திகள் கசிந்துள்ளன.
பொது பல சேனா அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் பெண் ஒருவரிக் கட்டிப் பிடித்தமை தொடர்பாகவே இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் போது இருவருக்கும் இடையே முகவும் கீழ்த்தரமான வார்த்தை பிரயோகங்கள் பரிமாரப் பட்டதாகவும் தெரிய வருகிறது.
ஓரிரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த கைகலப்பில் திடகாத்திரமான தோற்றமுள்ள நந்த தேரர் திலந்த விதானகேயுடன் கடுமையாக மோதியதாகவும், திலந்த விதானகே நந்த தேரரின் சிவுரவை அவிழ்த்து கீழே போட்டதாகவும் தெரியவருகிறது. நந்த தேரரின் கடுமையான தாக்குதல்களால் திலந்த விதானகேயின் உடலின் உற் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும். அதற்காக அவர் இபோது சிகிச்சை பெறுவதாகவும் அறிய வருகிறது.
இருந்த போதிலும் குறித்த சம்பவம் தொடர்பில் இருவரும் பொலீசில் முறைப்பாடு எதனையும் செய்யவில்லை என்றும், காயங்களுக்கும் இருவரும் தனிப்பட்ட ரீதியில் இரகசியமாக சிகிச்சைகளை மேற்கொள்வதாகவும் த்ரிய வருகிறது.
இந்த செய்தியை முன்னனி சிங்கள செய்தித் தளமொன்று வெளியிட்டிருந்தது.
No comments