வடக்கு மக்களை விட அமெரிக்கா போன்ற நாடுகளிற்கே வட மாகாணசபை தேர்தல் அவசியமாகவுள்ளது–விமல் வீரவன்ச
வட மாகாண சபைக்கு தேர்தல் நடத்த வேண்டிய தேவை மக்களை விடவும் வேறு தரப்பினருக்கே உள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் களுத்துறை நகர மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கில் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்ற கேள்வியையே இந்தியா அனைத்து சந்தர்ப்பங்களிலும் தொடுத்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தேர்தலை நடத்த வேண்டிய தேவை வடக்கில் உள்ள மக்களை விட அமெரிக்காவிற்கும் மேற்குலக நாடுகளுக்கும் உள்ளதாக அவர் கூறியுள்ளார். பிராந்தியத்தின் அதிகாரம் பொருந்திய நாடு என்ற வகையில் இந்தியாவுக்கும் அந்த தேவை உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments