Breaking News

இலங்கையில் ஆட்கடத்தல் சம்பவங்கள் பாரிய சிக்கலாக உருவாகியுள்ளது!- ஹக்கீம்

rauf hakeemஇலங்கையில் ஆட்கத்தலுக்கு உள்ளாகுதல் என்பது பாரிய சிக்கலாக மாறி வருவதாக அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஆட்கடத்தல் செயற்பாடுகளை தடுப்பதற்காக அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் இணைந்து, பாலி திட்டத்தின் கீழ் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாடுகளின் அனுமதியை மீறி, வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக மனிதர்களை கொண்டு சென்று பிரவேசிக்க செய்வது சட்ட விரோதமாகும். அத்துடன் படகுகள் மூலம் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடல்மார்க்கமாக செல்வது உயிராபத்து நிறைந்த ஒரு விடயம்.

இந்த நிலையில் அவற்றை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் இலங்கையில் தற்போது நடைமுறையில் இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments