பலாகல பிரதேச செயலாளர் அலுவலக பணியாளர்கள் அபாயா அணியத்தடை
அநுராதபுர மாவட்டம், பலாகல பிரதேச செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றும் முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்களுக்கு அபாயா அணியக்கூடாது என பிரதேச செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கடந்த வெசாக் தினத்தன்று குறித்த பிரதேச செயலகத்தில் நடைபெற்ற மத அனுஷ்டான நிகழ்வுகளில் குறித்த முஸ்லிம் பெண்கள் கலந்து கொள்ளவில்லை. இதனையடுத்தே இந்த உத்தரவை பிரதேச செயலாளர் கே. பீ. எஸ். பீ. கழுவாராச்சி பிறப்பித்துள்ளார்.
எதிர்வரும் 10.06.2013 திகதி முதல் கட்டாயம் இந்த நடைமுறையினை பின்பற்ற வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பலாகல பிரதேச செயலகத்தில் ஒன்பது முஸ்லிம் பெண்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் இருவர் மௌலவியாக்கள் ஆவர். அவ்விருவருக்கும் குறித்த தினத்தில் காரியாலயத்தினத்தில் ஹபாயா அணிய முடியுமெனவும் ஏனையோர் கட்டாயம் சாரி அணிந்து வரவேண்டும் எனவும் பிரதேச செயலாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(VD)
No comments