Breaking News

வடமாகாண வாக்காளர் பட்டியல் கிராம சேவகரிடமிருந்து இராணுவத்தின் கைக்கு மாறுகிறது – கஃபே

CFவடக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் – கிராம சேவர்களிடமிருந்து வாக்காளர் பட்டியலை பெற்றுக்கொள்வது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது என சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கஃபே அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது..

2012 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை கிராம சேவகர்களிடமிருந்து இராணுவத்தினர் பெற்றுக்கொள்வதுடன் அவர்களில் மரணமடைந்தவர்கள், வெளிநாட்டுக்குச் சென்றவர்கள், வேறு பகுதிகளுக்கு சென்றவர்கள் தொடர்பான விபரங்களையும் சேகரித்து வருகின்றனர் என தொரிவிக்கப்பட்டுள்ளது

இந்த செயற்பாடானது வாக்காளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதுடன் வட மாகாண சபை தேர்தல்லின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அந்த அமைப்பு

அரசாங்கம் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு இராணுவ பிரசன்னமற்ற தேர்தலை வடக்கில் நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

No comments