Breaking News

பொதுபல சேனாவுக்கு அஞ்சி மக்களுகான எனது செயற்பாடுகளை விட மாட்டேன் – வாசுதேவ

vasuமக்களின் நம்பிக்கையை வெல்ல முடியாதவர்களே மாற்று வழிகளை யோசித்து சூழ்ச்சிகளை மேற்கொள்வார்கள் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக பொதுபல சேனா அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவை இலக்கு வைத்து பல்வேறு விமர்சனங்களை செய்து வருகின்ற நிலையில் அதுகுறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மக்கள் மீது நம்பிக்கையை வைத்து தேர்தலில் வெற்றி பெற முடியாதவர்களே மாற்று வழிகளைக் கையாண்டு என்னுடைய பலத்தைக் குறைப்பதற்கு முயற்சி செய்கின்றனர்.

அத்தோடு இரத்தினபுரி மாவட்டத்தில் இருக்கும் எனது வாக்கு பலத்தை இல்லாமல் செய்வதற்கே இந்த முயற்சியென என்னால் புரிந்து கொள்ள முடிவதாகவும் இதற்கு பொதுபல சேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேர்ரை அரசு நாடி என்னை விமர்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.

பொதுபல சேனாவின் கருத்துக்களுக்கு மக்கள் ஏமாந்துவிட மாட்டார்கள். நானும் ஞானசார தேரரின் கருத்துக்களுக்கு அஞ்சப் போவதில்லை எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் சம்மான உரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்கு என்னுடைய நடவடிக்கைகள் தொடரும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments