Breaking News

உண்மைக்கு மாறாகப் பேசி வெட்கமில்லாமல் சிங்களவர்களைத் தூண்டி விடுகிறார் விமல் – மனோ

4154506769_b0cb9ec914தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு 13ம் திருத்த சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதாக ஐநா சபைக்கும், இந்தியாவுக்கும் அல்லது எந்த ஒரு உலக நாட்டுக்கும் இலங்கை அரசு எந்த வித உறுதிமொழியும் கொடுக்கவில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச கூறுவது உண்மைக்கு மாறான வெட்கமற்ற பொய்யுரை ஆகும்.

யுத்தம் முடிந்த இரண்டு நாட்களில் இலங்கை வந்த ஐநா செயலாளர் நாயகம் பான் கி மூனுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதன்பின்னர் 21-05-2009 என்று திகதியிடப்பட்டு கொழும்பிலிருந்து வெளியிடப்பட்ட எழுத்து மூலமான அதிகாரப்பூர்வமான இலங்கை அரசு – ஐநா சபை கூட்டறிக்கையில், இலங்கை அரசாங்கம் 13ம் திருத்தத்தை அமுல் செய்வதுடன், தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதை மேலும் அபிவிருத்தி செய்து அப்பால் செல்வதாக திட்டவட்டமாக சொல்லப்பட்டுள்ளது.

எனவே அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், என் நண்பருமான விமல் வீரவன்ச ஊடக சந்திப்புகளில் உண்மைக்கு புறம்பாக பொய் பேசி, தவறான தகவல்களை தந்து, சிங்கள மக்களை தவறாக வழி நடத்த கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கண்டி பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட கலையரங்கில் நடைபெற்ற வட-மாகாணசபை தேர்தல் தொடர்பான கூட்டத்தில், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பையேற்று, பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்குறிப்பிட்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

No comments