நாயை சுடுவது போல் சுடுவேன்: உயர் பொலிஸ் அதிகாரியை மிரட்டிய கோத்தபாய
இரத்தினபுர மாவட்டத்தில் பணியாற்றும் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியை நாயை சுடுவது போல் சுடுவேன் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மிரட்டியுள்ளார் என பிரான்சில் இருந்து இயங்கும் செய்த் தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமக்கு (பாதுகாப்புச் செயலாள்ருக்கு) ஆதரவானவர்களின் சட்டவிரோத செயல்கள் அதிகரித்ததால், அதனை கட்டுப்படுத்தும் முகமாக பொறுப்பானவர்களை கைது செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்தார் இரத்தினபுரி பகுதிக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியான பிரிசாந்த ஜயக்கொடி. இதனையடுத்தே, அவரை மே 30ம் திகதி உடனடியான பாதுகாப்பு அமைச்சுக்கு வருமாறு அழைப்பு விடுத்த கோத்த பல அரச உத்தியோகத்தர்கள் இராணுவ அதிகாரிகளின் முன்னிலையில் கடுமையாக திட்டியதோடு, தனக்கு சார்பானவர்களை இனிக் கைது செய்ய முயற்சித்தால் நாயை சுடுவது போல் உன்னைச் சுடுவேன் என மிரட்டியுள்ளார்.
No comments