Breaking News

21 கோடி ரூபா கடனே கொலைக்கு காரணம்

muslim busnessman siyam பம்பலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகரான சியாமின் படுகொலைக்கு 21 கோடி ரூபா கடன் விவகாரமே காரணம் என தற்போது விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இக் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரான நண்பர், கொலையுண்ட வர்த்தகருக்கு 21 கோடி ரூபா கடன் கொடுக்க வேண்டும் எனவும் அதனைக் கொடுக்க முடியாத நிலையிலேயே அவரைக் கொலை செய்வதற்கு திட்டமிட்டதாகவும் பொலிஸ் விசாரணைகளிலிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.

வர்த்தகர் சியாம் தனது வர்த்தக நண்பர்கள் பலரிடமிருந்தும் நம்பிக்கையினடிப்படையில் பணத்தைப் பெற்று சம்பந்தப்பட்ட நபருக்கு வழங்கியிருந்ததாகவும் அக் கடன் தொகையை திருப்பிக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதையடுத்தே நண்பர் சியாமை கொலை செய்வதற்கு பாதாள உலகத்தினருடன் இணைந்து திட்டமிட்டதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments