முஸ்லிம் சமூகத்திற்காக பாரளுமன்றத்தில் குரல் எழுப்பிய தயாசிரி
குருநாகல் மாவட்ட ஐ.தே.க பாராளுமன்ற உருப்பினர் தயாசிரி ஜாயசேகர அவர்கள் முஸ்லிம் மாணவர்கள் சிங்கள பாடசாலைகளில் மதத்தை முன்னிலைப்படுத்தி நிராகரிக்கப்படுவது தொடர்பில் நேற்று (5/5/2013) பாராளுமன்றக்கூட்டத்தொடரில் கல்வி அமைச்சரிடம் கேல்வியாக தொடுத்துள்ளார். அவர் மேற்படி கேல்வியை குருநாகல் பாடசாலை ஒன்றில் முஸ்லிம் மாணவன் ஒருவனுக்கு ஏற்பட்ட அசாதாரனத்தை முன்னிலாய்ப்படுத்தியே எழுப்பியிருந்தார், அதாவது, குருநாகல் நகரில் மிகப்பிரபல்மான பாடசாலைகளில் ஒன்றான மலியதேவ ஆண்கள் பாடசாலையில் முஸ்லிம் வைத்தியர் ஒருவரின் மகனது விண்ணப்பம் குறித்த விண்ணப்பதாரி முஸ்லிம் என்பதால், இது பௌத்த பாடசாலை, எனவே இங்கு முஸ்லிம்களுக்கு அனுமதி வழங்க முடியாது என சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபர் கூறி விண்ணப்பத்தை நிராகரித்ததாகவும் குறித்த மாணவனின் தந்தை இது தொடர்பாக தன்னிடம் முறையிட்டதாகவும் திரு தயாசிரி மேலும் தெரிவித்தார்...
இது தொடர்பில் பதில் கருத்து வழங்கிய கல்வி அமைச்சர் திரு பந்துல குணவர்தன அவர்கள் மதத்தை முன்னிலைப்படுத்தி ஒரு போதும் இவ்வாரான செயற்பாடுகள் இடம்பெற முடியாதென்றும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூலம் : PannawaSMS
No comments