Breaking News

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்கவுள்ள கரு ஜயசூரிய?

karuஜக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பிரதித் தலைவரும் சிரேஷ்ட அரசியல் வாதியுமான கரு ஜயசூரிய எம்.பி யை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறக்க வண.மாதுலுவாவே சோபித்த தேரர் தலைமையிலான சுதந்திர சமூகத்துக்கான தேசிய இயக்கம் தீர்மானித்துள்ளது என நம்பகரமாகத் தெரிய வருகின்றது. நாட்டின் நல்லாட்சியை நோக்கிய பயணத்திற்கு பெளத்தர் தேரர்கள் தீவிர ஆர்வம் காட்டி வரும் நிலையில் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் முக்கிய பல பெளத்த மதத்தலைவர்கள் பல சுற்றுப்பேச்சுக்களின் பின்னர் மேற்படித் தீர்மானத்தை எடுத்துள்ளனர். என்றும் அறியமுடிகின்றது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக எவரைக் களமிறக்காலாம். என அரசியல் கட்சிகளின் மட்டத்திலும் மற்றும் சிவில் அமைப்புக்கள் மட்டத்திலும் பல்வேறு பேச்சுக்கள் இடம்பெற்றுவரும் நிலையில் மாதுலுவாவே சோபித்த தேரர் தலைமையிலான இயக்கம் இவ்வாறனதொரு தீர்மானத்தை எடுத்துள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட்டு நாட்டில் நல்லாட்சியை உருவாக்க வேண்டும் என்பதற்காக வண.மாதுலுவாவே சோபித்த தேரர் அண்மைக்காலமாக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். அத்துடன் ஆளும் மற்றும் எதிரணி அரசியல் பிரமுகர்களுடனும் இது குறித்துப் பல பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றார். இந்நிலையில் எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தேர்தலை நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவதற்க்கான தகுதியான வேட்பாளர் குறித்தும் இந்த இயக்கத்தினர் அதீத அக்கறை செலுத்தியுள்ளனர். இதற்கமைய பெளத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என அனைத்து இன மக்களின் நன்மதிப்பைப் பெற்றுவரும் அரசியல் களத்தில் சிறந்த அனுபவசாலியுமான ஜ.தே.கட்சியின் முனனாள் பிரதித்தலைவர் கரு ஜயசூரியவைக் களமிறக்க தீர்மானித்துள்ளனர். எனத் தெரிவிக்க்கப்படுகின்றது.

மேற்படி தமது தீர்மானம் குறித்த பெளத்த மத சிரேஷ்ட தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுவிட்டதென்றும் அந்த இயக்கத்தினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஜக்கியதேசியக் கட்சியால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட புதிய அரசமைப்பு நகல்வரைபு குறித்து கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலமையிலான குழுவினர் மாதுலூவாவே சோபித்த தேரரை சந்தித்து அண்மையில் பேச்சு நடத்திய போது இந்த அரச அமைப்பு நகல் வரைவை சோபித்த தேரர் வரவேற்றுள்ளார்.

தமது தலமைத்துவத்தின் கீழ் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கரு ஜெயசூரிய எம்.பி.களமிறங்கப்படுவார் என்றும் தேர்தலில் வெற்றி அடைந்த பின்னர் ஜ.தே.கவால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த அரசமைப்பு நிறைவேற்றப்படும் என்றும் அக்கட்சியிடம் சோபித்த தேரர் எடுத்துரைத்துள்ளார். என்றும் அறியமுடிகின்றது. அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தலை நடத்த அரசுக்கு அழுத்தம் கொடுத்து தான் ஆட்சியை நிச்சயம் கைப்பற்றியே தீரும் என்றும் பிரதான எதிர்கட்சியான ஜக்கியதேசியக் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில் சோபித்த தேரர் தலமையிலான சுதந்திர சமூகத்திற்க்கான தேசிய இயக்கம் இவ்வாறானதொரு தீர்மானம் மேற்க்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments