உலகில் அமைதி நிலவும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 110ஆவது இடம்! (படங்கள் இனைப்பு)
வருடாந்தம் Vision of Humanity எனும் அமைப்பு நடாத்தும் கணிப்பீட்டின் முடிவுகள் வெளியிடப் பட்டுள்லன. உலகில் அமைதி நிலவும் நாடுகளை தரப்படுத்தி வெளியிடப்படும் உலக அமைதிச் சுட்டெண்ணில் இலங்கை 110ஆவது நாடாக பட்டியலிடப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டின் நிலவரங்களை ஆராய்ந்து 2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தச் சுட்டெண்ணில் இலங்கை 107ஆவது இடத்தில் இருந்த போதிலும் இந்த ஆண்டு வெளியிடப்பட்ட சுட்டெண்ணில் மூன்று இடங்களுக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
அரசியல், அமைதி, உள்நாட்டு முரண்பாடுகள், பயங்கரவாதம் உட்பட பல விடயங்களை கணித்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளில் அமைதியான நாடாக பூட்டான் உள்ளது. இந்நாடு உலக அமைதி சுட்டெண்ணில் 20ஆவது இடத்தில் உள்ளது. இந்தியா 141ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
அமைதி இல்லாத மிக மோசமான பயங்கரவாதம் நிலவும் நாடுகளாக ஈரான், சூடான், ஆப்கானிஸ்தான், சோமாலியா ஆகியன உள்ளன.
கடந்த ஆண்டைப்போலவே இவ்வாண்டும் ஐஸ்லாந்து முதலாம் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சுட்டெண்ணில் டென்மார்க் இரண்டாம் இடத்திற்கும், நியூசிலாந்து மூன்றாம் இடத்திற்கும் வந்துள்ளன. நான்காம் இடத்தில் ஒஸ்ரியாவும், ஐந்தாம் இடத்தில் சுவிட்சர்லாந்தும் உள்ளன.
162 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ள இந்த பட்டியலில் ஆசிய நாடுகள் மட்டுமன்றி அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளும் பின்தங்கியுள்ளன.
ஜேர்மனி 15ஆவது இடத்திலும் பிரித்தானியா 44ஆவது இடத்திலும் அமெரிக்கா 99ஆவது இடத்திலும் பிரான்ஸ் 53ஆவது இடத்திலும் உள்ளன.
அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் அடிக்கடி நிகழும் துப்பாக்கி சூடு உட்பட பயங்கரவாத சம்பவங்களால் இந்த நாடுகள் அமைதி இழந்த நாடுகள் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
No comments