Breaking News

லஞ்சம் வாங்கிய நீதவான் சுனில் அபேசிங்க பணியிலிருந்து இடைநிறுத்தம்

judgeஹோமாகம மாவட்ட நீதவான் சுனில் அபேசிங்க பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மூன்று இலட்சம் ரூபாவை இலஞ்சமாக வாங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இவர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

No comments