கிறிஸ்தவ ஆலயம் மீதான தாக்குதல்: நீதிமன்றில் ஆஜரானார் ஞானசார தேரர்
மாலபேயில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று தாக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று வியாழக்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கெடுத்துக் கொள்ளப்பட்டபோது, பொது பலசேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் உட்பட மூன்று பிக்குகளும் மற்றும் சிலரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
ஞானசார தேரர் உட்பட 13 பேருக்கு எதிராக 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாலபே கிறிஸ்தவ ஆலயம் தாக்கப்பட்டது குறித்த விசாரணைகள் ஆரம்பமாகி இவர்களுக்கெதிராக 11 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
வியாழனன்று இடம்பெற்ற விசாரணையின் போது குறித்த ஆலயத்தில் பணி புரிந்த பிதா சாட்சியமளித்தார். வழக்கு விசாரணை ஜூலை 11ஆம் திகதிக்கு ஒத்திப் போடப்பட்டது.
No comments