Breaking News

அரசசார்பற்ற நிறுவனங்களும் பதிவு செய்யப்பட வேண்டும் – கோதாபய ராஜபக்‌ஷ

Gothaநாட்டில் தற்போது இயங்கி வரும் அரசசார்பற்ற நிறுவனங்களையும் (NGO) அரசசார் நிறுவனங்களை பதிவு செய்யும் அலுவலகத்தில் பதிவு செய்ய கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு சேவை செய்யவதாக கூறிக்கொண்டு நாட்டிற்குள் புகுந்து நாட்டின் செயற்பாடுகளை சீர்குலைத்தல், அரசாங்கத்திற்கு எதிராக சதித்திட்டங்களை தீட்டுதல், அதில் கொள்ளை இலாபத்தை சம்பாதித்தல், அரசியலில் ஈடுபட முற்படும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு முறைப்படி பதிவு செய்யாமல் இனி நாட்டிற்குள் எவ்வித செயற்பாடுகளிலும் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் கூறியுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்,

அரச சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்யும் அலுவலகத்தில் தங்களை பதிவு செய்கொள்ள வேண்டுமெனவும் அரச சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்யும் அலுவலகத்தின் பணிப்பாளராக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளரான லக்‌ஷ்மன் உலுகல்லவை நியமிக்கவுள்ளதாகவும் கோட்டபாய ராஜபக்‌ஷ சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அரச சார்பற்ற நிறுவனங்களைப் பதிவு செய்யும் அலுவலகத்தில் பதிவு செய்யாமல் நாட்டில் ஏதாவது ஒரு அரச சார்பற்ற நிறுவனம் இயங்குமாயின் அதற்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவ்வாறான அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை முற்றாக தடை செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அரச சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்யும் செயலகம் 2010ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், தற்போது நூற்றுக்கும் அதிகமான அரச சார்பற்ற நிறுவனங்கள் நாட்டிற்குள் இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments