Breaking News

குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணையை சந்திக்க தயார் – அருந்திக்க எம்.பி.

arundika-sirasa

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட பிரான்ஸில் வசிக்கின்றமை குறித்து நாடாளுமன்றத்தில் தான் தெரிவித்த கருத்து தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு அழைக்குமாயின் அதனை எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூறுகையில், 2011ஆம் ஆண்டு பிரான்ஸிலுள்ள பத்திரிகையாளரான மஞ்சுல வெடிவர்தனவை சந்திக்க சென்றிருந்தேன் அப்போது ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவும் அங்கு வந்திருந்தார்.

“நான் மஞ்சுல வீட்டில் இருந்த போது திடீரென ஒருவர் அந்த வீட்டிற்குள் வந்தார். உடனே நான் இவர் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தானே என்றேன். அப்போது அவர் பிரான்ஸில் இருந்து பிரிட்டன் சென்றுவிட்டு வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டேன். அவரை உடனடியாக அரசாங்கம் மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரவேண்டுமெனவும் அவர் பி.பி.ஸி. சிங்கள ஊடகப் பிரிவான சந்தேஷிக்குத் தெரிவித்துள்ளார்.

அருந்திக்க பெர்னாண்டோ மேலும் கூறுகையில், மஞ்சுல பெர்னாண்டோவின் வீட்டில் வைத்து ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை தனக்கு காட்டியதாக தனக்கு நிரூபிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு எக்னெலிகொடவை பார்த்தபோது ஏன் பிரான்ஸிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு செல்லவில்லை. உங்களை கைது செய்வதற்கு எவ்வித காரணங்களும் இல்லை என்றும் கூறினேன் என நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ சந்தேஷக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

No comments