முஸ்லிம் வர்த்தகர் கொலை: 3 பொலிஸ் அதிகாரிகள் கைது
பம்பலப்பிட்டியைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகரான சியாம் என்பவரின் கொலை தொடர்பில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் உட்பட 3 பொலிஸ் அதிகாரிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இக் கொலை தொடர்பில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவிடமும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலணி மொத்த வியாபாரியான சியாம், கடந்த மாதம் 22 ஆம் திகதி தனது நண்பரால் அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இவரது சடலம் தொம்பே பகுதியிலிருந்து 8 நாட்களின் பின்னர் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
No comments