Breaking News

இலங்கையில் சீதைக்கு கோயில் கட்டக்கூடாது: இராவண பலய எச்சரிக்கை

ravana palaya_CIஇலங்கையில் சீதைக்கு கோயில் கட்டக்கூடாதுதென இராவண பலய அமைப்பு தெரிவித்துள்ளது. நுவரெலியாவில் சீதைக்கு கோயில் கட்டுவதாக இந்திய மத்தியசபை முதல்வர் அறிவித்ததை இராவண பலய அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.

இதுகுறித்து இராவண பலய அமைப்பைச் சேர்ந்த இத்திகந்த சுத்ததிஸ்ஸ தேரர் கருத்து தெரிவிக்கையில்; சீதைக்கு கோயில் கட்ட விரும்பினால், முதலில் இராவணனுக்கு சிலை கட்டுங்கள். இந்த நிபந்தனையை மீறி இலங்கையில் இந்தியா சீதைக்கு கோயில் கட்டக்கூடாதென்று சுத்ததிஸ்ஸ தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையை ஆட்சி செய்த இராவணன், சீதையைக் கடத்திவந்து நுவரெலியாவில் வைத்திருந்ததாகவும், பின்னர் இராமன் வந்து சீதையை மீட்டுச் சென்றதாகவும் இராமாயணயத்தில் நம்பப்படுகிறது.

No comments