Breaking News

13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்: சம்பிக்க ரணவக்க

Champika13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். வடக்கில் தேர்தலை நடாத்தி பிரபாகரனுக்கு ஆதரவானவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டால், அதன் பிரதிபலன்களை அனைவரும் எதிர்நோக்க நேரிடும்.

சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு போதியளவு பாதுகாப்பு காணப்படுகின்றது. பெரும்பான்மையான தமிழர்கள் வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வடக்கிற்கு பொலிஸ் அதிகாரம் வழங்க வேண்டியதில்லை. வடக்கிலிருந்து சிங்கள மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அமைச்சரவைக்கு தேவையான வகையில் அனைத்தையும் செய்ய முடியாது என சம்பிக்க தெரிவித்துள்ளார்.

No comments