சாலி விடுதலையின் பின் வைத்திய சாலையில் (Update)
புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த அசாத் சாலி, ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய விடுதலை செய்யப்பட்டு தற்போது கொழும்பு நவலோக வைத்தியசாலிஅயில் சிகிச்சை பெறுகிறார்.
அசாத் சாலியின் தடுப்புக்காவல் உத்தரவினை ரத்து செய்யுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அசாத் சாலி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
குற்றத்தை ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்து அசாத் சாலி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின் இன்று விடுதலை செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தற்போது கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
அவரை அவரது குடும்பத்தினர் மற்றும் மனோ கணேசன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளனர்.
அசாத் சாலியின் பிணை மனு 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு
அசாத் சாலி சார்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மிறல் மனு மீதான விசாரணை எதிர்வரும் 28 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேல்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி மீதான அடிப்படை மனித உரிமை மீறல் மனு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு மேல்நீதி மன்றின் அறை எண் 502 இல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த மனு நீதிபதிகளான கே.ஸ்ரீபவன், சந்திரா ஏக்கநாயக்க மற்றும் சத்தியா ஹெடிகே ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது 'இந்த மனு தொடர்பான தகவல்களை கொடுக்க எமக்கு சிறிதுகாலம் தேவை . அவற்றை ஆராய்ந்து பார்ப்பதற்கும் பிரதிவாதிகளின் அறிவுறுத்தல்களையும் நாம் பெற வேண்டியுள்ளது.
இதனால் இந்த வழக்கு விசாரணைகளை சிறு காலத்திற்கு ஒத்திவைக்குமாறு' சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் சுகத கம்லத் தெரிவித்தார். இதனையடுத்து இந்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டன.
பிபிசி செய்தி
இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் துணை மேயரான அசாத்சாலி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
விடுதலை செய்யப்பட்ட அவர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மகளான அமீனா சாலி உள்ளூர் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அசாத் சாலி கைது செய்யப்பட்டிருந்தார்.
No comments