மீண்டும் ஆட்டம் போடத் தயாராகும் பொது பல சேனா…
சிறிது காலமாக வாய் மூடி இருந்த பொது பல சேனா தற்போது மீண்டும் ஆட்டம் போடத் தயாராவதாகத் தெரிகிறது. பெபிலியான ஃபெஷன் பக் தாக்குதலைத் தொடர்ந்து தமது ஆட்டத்தை பொது பல சேனா கொஞ்சம் குறைத்தது. அதனைத் தொடர்ந்து பொதுபல் சேனா குழுவினர் அமரிக்கா நோக்கி பறந்தனர். தற்போது தமது பழைய ஆட்டத்தை மீண்டும் ஆரப்பிக்கப் போவதாகவே தோன்றுகிறது.
இவர்களின் திடீர் மௌனம் பற்றி நாம் ஏற்கனவே “பொது பல சேனாவின் திடீர் மௌனம் என்ன சொல்கிறது” எனும் தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். அதனைப் படிக்க இங்கே கிலிக் செய்யுங்கள்
கிடைக்கப் பெற்ற தகவல்களின் படி இன்று அமரிக்கா சென்றுள்ள ஞானாசார தேரர் தலைமையிலான பொது பல சேனாவின் குழு நாடு திரும்புவதாக தெரிவிக்கப் படுகிறது. அத்தோடு நாளைய தினம் கேகாலை மாநகரில் பொதுபல சேனாவின் பாரிய கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே பூர்த்தியாகயுள்ளதாக அறியக் கிடைக்கிறது. நகரம் பூராகவும் கொடிகளும் பெனர்களும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடநத வாரங்களில் பஒதுபல சேனாவினால் வுடுக்கப்பட்ட ஊடக அறிக்கைகள், நேற்று முந்தினம் இடம்பெற்ற கூரகல (ஜய்லானி) மிரட்டல் சம்பவம் என்பன இந்த கேள்வியை நம்முள் எழுப்புகிறது. இதற்கு முன்னர் கேகாலை பள்ளிவாசல் மீது கல் வீச்சி நடாத்தப்பட்ட போது “இனி எந்த இனவாத நடவடிக்கைக்கும் கேகாலையில் இடமளிக்க மாட்டேன்” என கேகாலை பொலிஸார் கூறியிருந்தமை குறிப்பிடத் தக்கது. குறிப்பாக கல்வீச்சு நடந்த மறு நாள் நகரில் உள்ள் வியாபாரிகளுக்கு பொலிசாருக்கும் இடையி நடந்த சந்திப்பில் பொது பல சேனாவின் எந்தநடவடிக்கைக்கும் கேகாலையில் இடமளிப்பதில்லை என உறுதியளிக்கப் பட்டிருந்தமையும் குறிப்பிடத் தக்கது.
பொது பல சேனாவின் குழுவினர் அமரிக்காவில் இருக்கும் போது இடம்பெற்ற ஞானாசார தேரருக்கு எதிர்டான தீர்மானம், அதன் பங்காளிகளான சிங்கள ராவய, ராவன பலய ஆகியவற்றுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டது என்ற அறிக்கை என்பன ஒரு நாடகனாகவே இப்போது தோன்றுகிறது. அதே வேளை சிங்கள் ராவயவின் கூட்டமொன்று எதிர்வரும் 18 ஆம் திகதி தெகிவலையில் இடம்பெறவிள்ளதாகவும் தெரியவருகிறது.
Admin
No comments