ஹெல உறுமயவின் நடவடிக்கைகள் ஜனாதிபதியையும், ரணிலையும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது?
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சில நடவடிக்கைகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவையும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது, மாகாணசபைகளின் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் ரத்து செய்யப்பட வேண்டுமெனக் கோரி ஜாதிக ஹெல உறுமய விரைவில் உத்தேச சட்ட மூலமொன்றை பாராளுமன்றில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது.
எனினும், இந்த சட்டத் திருத்தம் ஆளும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு பெரும் தலையிடியாக மாறியுள்ளது.ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் சுய விருப்பின் அடிப்படையில் இந்த உத்தேச சட்டம் தொடர்பான வாக்கெடுப்பின் போது வாக்களிக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சித் தலைவர்களிடம் கோரவுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி கொள்கைகளுக்கு அமைவாக அன்றி சுய விருப்பின் அடிப்படையில் வாக்களித்தால், இந்த சட்டத் திருத்தத்தை இலகுவில் அமுல்படுத்த முடியும் என ஜாதிக ஹெலஉறுமய நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணசபையில் வரதராஜா பெருமாள் செய்ததனை எவரும் மறந்து விடக் கூடாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
புலி ஆதரவு புலம் பெயர் சமூகத்தின் ஒத்துழைப்புடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் மீண்டும் பிரிவினைவாதத்தை தூண்டக் கூடிய அபாயம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
No comments