இலங்கையில் பௌத்த தலிபான் அமைப்பு இயங்கி வருகின்றது!- கத்தோலிக்க ஆயர் ரெய்மன்ட்
இலங்கையில் பௌத்த தலிபான் அமைப்பு இயங்கி வருவதாக காலி மாவட்ட கத்தோலிக்க ஆயர் ரெய்மன்ட் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
த ஃபைட் எனப்படும் கிறிஸ்தவ பாதுகாப்பு அமைப்புக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனைத் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுபல சேனா என்ற அடிப்படைவாத அமைப்பு தொடர்ச்சியாக சிறுபான்மை இனங்களுக்கு எதிரான வன்முறைகளை மேற்கொண்டு வருகிறது.
யுத்தம் நிறைவடைந்த சில வருடங்களுக்குள்ளேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளமை, சமூகங்களுக்கு இடையில் வன்முறையை மீண்டும் தோற்றுவிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் நிலையான சமாதானம் மற்றும் அமைதி பேணப்படுவதற்காக விசேட ஆணைக்குழு ஒன்றின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஆயர் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments