அசாத் சாலி கைது (Update)
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் அசாத் சாலி இன்று காலை குற்றவிசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலன்னாவை பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்தே காலை 6.45 அளவில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாத் சாலி அண்மையில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த போது வெளியிட்ட கருத்துகள் காரணமாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இந்த கைது இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக அசாத் சாலி பாதுகாப்பு பிரிவினரால் பின்தொடரப்பட்டு வந்த நிலையில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.
அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு, பின்னர் பிரிந்து சென்று அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்ற நிலையில் அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அன்மையில் பொதுபல சேனா , ராவன பலய ஆகியவற்றின் தலைவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளில் எடுக்கவுள்ளேன் என்று அசாத் சாலி கூறியுமிருந்தார், மேலும் கடந்த சில நாட்களாக அவர் மறைந்திருந்தார் என்பதும் இங்கு ஞாபகமூட்டத்தக்கது.
No comments