Breaking News

அசாத் சாலியை விடுதலைக்கு ஜனாதிபதியிடம் கோருவது பயனற்றது - ஹுலுகல்ல

9d5a45e5db7b57bf3408002bc56bd959_XLபயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோருவது பயனற்றது என்று தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தனது தந்தையை விடுதலை செய்யுமாறு கோரி, அசாத் சாலியின் மகள் நேற்றைய தினம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல, இலங்கைக்கு எதிராக இந்திய சஞ்சிகை ஒன்றுக்கு அசாத் சாலி வழங்கிய தகவல் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக மேலும் தெரிவித்தார்.

(VD)

1 comment:

  1. அரசாங்கம் ஆடும் நாடகத்தின் பிரதான நடிகர்களுல் ஒருவன் .... :-?

    ReplyDelete