Breaking News

அசாத் சாலி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவில்லை ;சாலி உண்ணாவிரதம்; நாளை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Azath Salley -  Leader of the Muslim Tamil National Alliance2 இன்று காலை குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட முன்னாள் கொழும்பு மா நகரசபையின் பிரதி மேயர் அசாத் சாலி இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவில்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக்க சிறிவர்த்தன தெரிவித்தார். இந்நிலையில் அசாத் சாலி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவு பொலிசார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே நான்காம் மாடியில் தனது கைதை எதிர்த்து அசாத் சாலி உண்ணாவிரதம் இருந்து வருவதாகவும் இதனால் நீரிழிவு நோயாளரான அவரின் உடல் நிலையில் சிக்கல்கள் ஏற்படலாம் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் அசாத் சாலி கைது செய்யப்பட்டதை எதிர்த்து நாளை ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தெவடகஹ பள்ளிவாசலுக்கு முன்னாலிருந்து குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் மனோ கணேசன் மற்றும் விக்ரமபாகு கருணாரத்ன உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

 

(VD)

No comments