ஹலால் விடயத்தில் அடக்கிவாசிக்கின்றோம் ; பிரச்சினை முடியவில்லை : BBS
ஹலால் தொடர்பில் நாட்டில் ஏற்பட்ட பிரச்சினை இன்னும் முடிவடையவில்லையெனவும் அதற்கு தீர்வு காணும் வரை ஓயப் போவதில்லையெனவும் பொது பல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரியான டிலந்த விதானகே தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஹலால் தொடர்பில் நாம் முன்னெடுத்த செயற்றிட்டங்களை நிறுத்தி சில காரணங்களால் தற்காலிகமாக நிதானமாக செயற்படுகிறோம். ஹலாலுக்கு எதிரான எமது பிரசாரத்தை பயன்படுத்தி சிலர் அநாவசியமான பிரச்சினைகளை ஏற்படுத்த முயன்றனர். முஸ்லிம் வியாபார நிறுவனங்களை தாக்கி சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்டனர். எனவே எமது ஹலாலுக்கு எதிரான பிரச்சாரங்களை நாம் சற்று பிற்போட வேண்டி ஏற்பட்டது.
அதற்காக ஹலால் பிரச்சினை முடிந்து விட்டது என்று அர்த்தமல்ல. ஹலால் விடயத்தில் பொது பல சேனா தொடர்ந்தும் தீவிரமாக செயற்படும். எமது இலக்கு அடையப்படும் வரை நாம் ஓயப் போவதில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிடடார்.
.
No comments