Breaking News

முஸ்லிம் ஆலோசனை சபை உருவாக்கம்; ஷூரா கவுன்சிலுக்கான ஏற்பாடுகளும் மும்முரம்

DiscussionForum

முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டும் சமூகத்தில் ஓர் இணக்கப்பாட்டை தோற்றுவிக்கும் நோக்கிலும் முஸ்லிம் இயக்க பிரதிநிதிகளையும் சமூக ஆர்வலர்களையும் கொண்ட அரசியல் கலப்பற்ற முஸ்லிம் ஆலோசனை சபை ஒன்று உருவாக்கப்பட்டுள்ள முஸ்லிம் கவுன்சில் அறிவித்துள்ளது. இதேவேளை இதற்கு மேலதிகமாக தேசிய ஷூரா கவுன்சில் ஒன்றை தாபிப்பதற்கான முயற்சிகளும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று கொழும்பில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் கவுன்சிலினால் உருவாக்கப்பட்டுள்ள ஆலோசனை சபையில் 75க்கும் அதிகமான உலமாக்கள், முஸ்லிம் இயக்கப்பிரதிநிதிகள், வர்த்தகர்கள், கல்விமான்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் ஆகியோரைக்கொண்டவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை உத்தேச ஷூரா கவுன்சிலிலும் முஸ்லிம் புத்திஜீவிகள், உலமாக்கள், துறைசார் அறிஞர்களை உள்ளடக்கி பலம் வாய்ந்த தலைமைத்துவக் கட்டமைப்பு ஒன்றை தோற்றுவிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம் சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து உயர்மட்டம் வரை யான பலதரப்பட்ட பிரதிநிதிகளை உள்ளட க்கியதாக குறித்த ஷூரா கவுன்சில் அமை யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(VD)

No comments