Breaking News

இனவாதத்தை தூண்டுகிறது பொது பல சேனா:இளம் வழக்கறிஞர் சங்கம்

Bodu-Bala-Sena போராட்ட சுதந்திரம் என்ற போர்வையில் இனவாதத்தை தூண்டும் பொது பல சேனாவின் செயற்பாட்டை பொலிசார் கண்டுகொள்ளாமல் இருப்பது சட்டத்தை மீறும் செயல் என இளம் வழக்கறிஞர் சங்கத்தின் நிறைவேற்று உறுப்பினர் தனுக மகேந்திர தெரிவித்தார். கொழும்பு தேசிய நூலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமது மத சுதந்திரத்துக்காக போராடுகிறோம் என்று கூறிய வண்ணம் இனவாதத்தை தூண்டக்கூடிய அமைப்பாக பொது பல சேனா மாறியுள்ளது. இலங்கை சட்டத்தின் படி இச்செயற்பாடு தண்டனைக்குரிய குற்றமாகும்.இருப்பினும் இவ்விடயத்தில் பொலிசார் வேடிக்கை பார்ப்பது சட்டத்தை மீறிய செயலாகும் என தெரிவித்தார்.

 

(VD)

No comments