Breaking News

அசாத் சாலி உண்ணாவிரதத்தை கைவிட்டார்..

vv-asath shally கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவந்த, குற்றப்புலனாய்வுப்பிரிவினரின் தடுப்புக்காவலில் உள்ள கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையிலேயே அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார். நேற்று இரவு அவரை பார்வையிட சென்ற அவரது மனைவி கட்டாயப்படுத்தி தோடம் பழச்சாறு வழங்கி அவரது உண்ணாவிரதத்தை முடித்ததாகவும் தொடர்ந்தும் உண்ணாவிரதம் இருந்தால் அசாத் சாலி கோமா நிலைக்கு செல்லலாம் என அவருக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியர்கள் குறிப்பிட்டதாகவும் அசாத் சாலியின் சட்டத்தரணியான சிராஸ் நூர்டீன் விடிவெள்ளியிடம் தெரிவித்தார்.

No comments