“பௌத்தம் மட்டும்” கோஷம் அரசியல் யாப்புக்கு முறனானது
இலங்கை சிங்கள் பௌத்தர்களுக்கு மட்டும் உரிய நாடு எனும் கோஷத்தை முன் வைக்கும் பேரினவாத பௌத்த அமைப்புக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் வேண்டியுள்ளார்.
நாட்டின் அரசியல் யாப்பில் பௌத்த மதந்திற்கு முன்னுரிமை வழங்கியுள்ளமை போலவே ஏனைய சமயத்தவர்களௌக்கும் அவரவரது சமயத்தை பின்பற்றும் உரிமையை சட்டரீதியாக வழங்கியுள்ளது. இந்த பௌத்தம் மட்டும் எனும் கோஷம் அரசியல் யாப்பை மீறும் செயலாகும் எனவும் அவர் மேலும் கூறினார்.
சிங்களம் மட்டுமே என்ற பிரச்சாரம் காரனமாக நாடு முப்பது வருடகால அழிவொன்றை சந்திதை நினைவு கூர்ந்த அவர் மதத் துவேசத்தை தூண்டுதல் நாட்டில் சட்டத்தை மீறும் நடவடிக்கை என்றார். அது பற்றி அவர் கூறுகையில் “ சிங்களம் மட்டும் கோஷத்தால் 30 வருட யுத்தம் காரனமாக நாடு பாரிய அழிவுகளை எதிர் நோக்கியது. இன்று தோன்றியுள்ள பௌத்தம் பட்டும் கோஷம் இவ்வாறு முன்னெடுக்கப் பட்டால் நாடும் இன்னும் பல அழிவுகளை சந்திக்க நேரிடும்”
சில அமைச்சர்களுடம் நாம் பேசிய போது அவர்களும் இரு தடுக்கப் பட வேண்டும் நிறுத்தப்பட வேண்டும் என அவர்களும் கூறினர். என்றாலும் இவற்றின் பின்னனியில் யார் இருக்கின்றார்கள் என சந்தேகம் எழும்புகின்றன என்றார்.
நேற்றைய தின பீபீசீக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்தக் கருத்துக்களைக் கூறியிருந்தார்.
No comments