Breaking News

13ஆவது அரசமைப்பிற்கு எதிராக பொதுபலசேனாவும் களமிறக்கப்படுகிறது!

BoduBalaSena-Talks13ஆவது அரசியலமைப்புத் திருத்திற்கு எதிராக மக்களின் கருத்துக்களைக் கட்டியெழுப்புவதற்கு பொதுபல சேனா தயாராகிவருவதாக அந்த அமைப்பின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை பொதுபலசேனா அமைப்பு 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து தமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளியிட்டிருக்கவில்லை.

எனினும், இன்று (21) பிற்பகல் 2 மணிக்கு கொழும்பில் நடைபெறவும் ஊடகவியலாளர் சந்திப்பில் தமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளியிடவுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுபல சேனா அமைப்பு பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவின் முழுமையான ஆதரவுடன் செயல்பட்டுவரும் அமைப்பு என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

அதிகாரப்பகிர்வுக்கு பொதுபல சேனா அமைப்பு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்துவந்தது. எனினும், 13ஆவது திருத்தம் குறித்து தற்போதே அந்த அமைப்பு கருத்துவெளியிடத் தயாராகியுள்ளது.

எவ்வாறாயினும், இவ்வருட ஜனவரி 31ஆம் திகதி ஏசியன் ரியூபூன் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியில், பொதுபல சேனா அமைப்பின் செயல்பாடுகளுக்கு குறித்து கருத்து தெரிவித்திருந்த அந்த அமைப்பின் இணைப்பாளர் டிலந்த விதானகே, 13ஆவது அரசியலமைப்பிற்கு தமது அமைப்பு ஆதரவு வழங்காது எனக் கூறியிருந்தார்.

No comments