முக்கிய தேரர்களை சந்திப்பதற்காக இலங்கை வருகிறார் தாய்லாந்து பிரதமர்

43943d4f1bc64860a921720bb69efc90தாய்லாந்து பிரதமர் இன்குலுக் சினவத்ர இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்‌தை மேற்கொண்ட இன்று வெள்ளிக்கிழமை இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

இலங்கை வரும் தாய்ந்தாந்து பிரதமர் இங்குள்ள உடுகம ஸ்ரீ புத்தராக்கித தேரர், அஸ்கிரிய பீடாதிபதி மகாநாயக்க தேரர், மீகட்டுவத்த ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர் ஆகியோரைச் சந்தித்து பேசவுள்ளார்.

இவர் கண்டி, தலதா மாளிகையை தரிசித்துவிட்டு, உபசம்பத சமய நிகழ்ச்சியிலும் பங்குபற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments