விமல் வீரவன்சவுக்கும் சிவ சேனாவுக்கும் தொடர்பு : பொது பல சேனா
அமைச்சர் விமல் வீரவன்சவுக்கும் இந்தியாவின் சிவ சேனா அமைப்புக்குமிடையில் தொடர்பிருப்பதாக பொது பல சேனா வின் செயளாலர் ஞானாசார தேரர் குற்றம்சாட்டியுள்ளர்.
பாதுக்கையில் உள்ள பௌத்த பிக்கு ஒருவருடன் இணைந்து அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி பணியாற்றுவதாகவும் இதற்கு சிவ சேனாவிடமிருந்து நிதி கிடைப்பதாகவும் பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
சிவ சேனா அமைப்பு இந்தியாவில் இந்துத்துவத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இயங்குகிறது. இந்தியாவில் அதிகமான இந்துக்கள் பௌத்த மதத்தை தழுவுவது சிவ சேனாவுக்கு பாரிய பிரச்சினையாகும். இதனைத் தடுக்கும் நோக்கிலேயே சிவ சேனா செயற்படுகிறது. பாதுக்கையிலுள்ள பௌத்த பிக்குவுக்கு சிவ சேனாவே நிதியுதவி வழங்குகிறது. அந்த பிக்கு எழுதியுள்ள புத்தகம் ஒன்றில் புத்தர் இலங்கையில் பிறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப் பின்னணியிலேயே அமைச்சர் வீரவன்சவுக்கும் அவரது மனைவிக்கும் சிவ சேனாவுடன் தொடர்பிருப்பதாக நாம் சந்தேகிக்கிறோம்.
இது தொர்பாக அமச்சட் வீரவன்சவிடம் நேற்று ஊட்கவியளாளர் ஒருவர் கேள்வி எழுப்புய போது, அதற்கு நான் ஆச்சரியப்படுகிறேன்! சிவ சேனா என்ற பெயரை பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் தான் அறித் திருக்கிறேன். இது ஒரு புனையப் பட்ட செய்து. ஒரு பௌத்த பிக்கு என்ற வகையில் ஞானாசார தேரர் அவ்வாறு பேசுவது சிறந்தடல்ல என நினைக்கிறேன் என பதில்; வழங்கினார்.
No comments