Breaking News

ஞானாசார தேரருக்கு விமல் வீரவன்சவின் பதில்

ww-galநோர்வேய்னால் பொது பல சேனாவுக்கு நிதியுதவி செய்யப்படுகிறது என அமைச்சர் விமல் வீரவன்ச அவர்கள் வெளியிட்ட கருத்தை நிரூபித்தால் தமது அமைப்பை 2 மணித்தியாளங்களுக்குள் களைப்பதாக அதன் செயளாலர் ஞானாசார தேர விடுத்த சவாலுக்கு நேற்றைய தினம் கொழும்பில் இடம் பெற்ற விளிப்புனர்வு நிகழ்வொன்றின் போது அமைச்சர் வீரவன்ச அவர்கள் பதில் வழங்கினார்.

பொது பல சேனாவுக்கு நோர்வே நிதியுதவி வழங்கியிருந்தால் நிரூபிக்கும்படி எனக்கு சவாழ் விட்டு பயனில்லை, அதனை அதே அமைப்பைச் சேர்ந்த திலந்த விதானகேயிற்கும், இலங்கையிலுள்ள நோர்வே தூதரகத்துக்கும் தான் இந்த சவால விடப்பட வேண்டும் என அமைச்சர் வீரவன்ச கூறியுள்ளார். திலந்த விதான கே ஏஷியன் ட்ரிபியூன் இனையத் தளத்துக்கு வழங்கிய தகவல் மற்றும் நோர்வே தூதரம் வெளியிட்ட அறிக்கை என்பவற்றின் அடிப்படையிலேயே நான் கருத்துக் கூறினேன் என அவர் மேலும் கூறினார்.

நேற்று இடம்பெற்ற மேற்குறித்த நிகழ்வின் போது ஊடகவியளாலர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கும் போதே இக்கருத்துக்கள் வெளியிடப்பட்டன. அதன் போதி அவர், : “மதிப்புக்கும் வணக்கத்திற்குமுரிய பிக்குமாரை நாம் மிகவும் மதிக்கிறேன். அவர்களுடன் எமது அரசியல் வாழ்க்கை பின்னிப் பினைந்துள்ளது. எனவே எந்த பிக்குவேலும் முன்வைக்கப்படும் சவால்களுக்கும் பதில் சவால விடும் கலாச்சாரம் என்னிடம் இல்லை.

என்றாலும் (ஞானாசார தேரர்) அவர்கள் கூறுவதைப் போல இது நான் கூறிய ஒன்றல்ல, அது அவர்களின் அமைப்பிலேயே உள்ள நோர்வே முகவரான திலந்த விதானகே அவர்கள் ஏஷியன் ரிபியூன் உடன் செய்த நேர்கானலி ஒப்புக் கொண்டுள்ளார். “ர்வேயிற்கு கூட்டிச் சென்றோம், அங்கே உண்ண, குடிக்க, தங்க, உறங்க இடம் வழங்கினோம்” என ஒப்புக் கொண்டுள்ளார்.அவ்வாறு கூட்டிச் சென்றோரின் விபரத்தை நோர்வே தூதரகம் வெளியிட்டிருந்தது. தூதரக அறிக்கையிலேயே கூறப்பட்டுள்ளது கல்வி அபிவிருத்திக்காக் உதவி வழங்கின்னோம் என்று. உதவி என்பது கச்சாகவே இருக்க வேண்டியதில்லை, பொருள் என்றாளும் அதற்கும் ஒரு பணப் பெருமதி இருக்கின்றது.

இதன் மூலமே தெளிவாகிறது, இது நான் கூறிய ஒன்றல்ல. எனக்கு சவால் விட்டு பிரயோசனமில்லை. திலந்த விதனகே அவர்களுக்கும், நோர்வே தூதரகத்துக்கும் தான் சவால் விட வேண்டும். இது அவகளாளே தெரிய வந்த விடயங்கள்.


தொடர்புடைய செய்திகள் :

பௌத்த தீவிரவாதத்துக்கு நோர்வே நிதி வழங்குகிறது : அமைச்சர் வீரவன்ச

K.T. ராஜசிங்கம் VS திலந்த விதானகே

Bodu Bala Sena to Tone down it’s stance on Muslims

பொது பல சேனாவுக்கு உதவி செய்தோம் நோர்வே அறிக்கை

No comments