Breaking News

இனவாத வியாதியும் மருந்தும்

ஸகி இஸ்மாயில்

racismசில நாட்களுக்கு முன்பு எனது நண்பர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் வேறு மதத்தினை சார்ந்தவராக இருப்பினும் முன்பைவிட தற்போது அவரிடம் இருந்த சில நல்ல பழக்கங்களை கைவிட்டு சற்று வித்தியாசமானவராகவும் இனவாதியாகவும் காட்சி அளித்தார். அவர் படிக்காத ஒருவரல்ல. அவர் ஐரோப்பிய பல்கலைக்கழகம் ஒன்றில் பொறியியல் துறையில் தத்துவமேதை பட்டம் பெற்றவர்.

இச் சந்திப்பு, மக்களை இனவாதியாகவும் மற்றயவர்களை வெறுக்கும் எண்ணம் உடையவர்களாகவும் மாற்றுவது எதுவென சிந்திக்க என்னைத் தூண்டியது.  இத்தேடலின் விளைவாக எனக்கு ஒரு படம் கிடைத்தது. இயல்பாகவே அது வெறுப்புணர்வின் காரணிகளை எனக்கு தெளிவாக விளக்கியது. அந்தப் படம் ஆயிரம் வார்த்தைகளைவிட பெறுமதியானது. இங்கு நான் அதனை சற்று விரிவாகவும், இனவாத சிந்தனையின் நோக்கத்தினை அறிந்து மருந்து செய்யும் பொருட்டு உங்களுக்கு விளக்க முயற்சிக்கின்றேன். இந்த முறையினை நீங்கள் எங்கெல்லாம் வேற்றுமையில் ஒற்றுமை அவசியப்படுகிறதோ அங்கெல் லாம் பரிசதனைக்குட்படுத்தி பார்க்க முடியும். அதன் மூலம் சிறந்த தேசிய சமூகம் ஒன்றினை கட்டியெழுப்பவும் முடியும் அல்லது எதிர்மாறாக பிரயோகித்து தேசிய நலனுக்கு அச்சுறுத்தல் மேற்கொள் ளவும் முடியும். எமது நாட்டில் மக்கள் இன்று எதிர்நோக்குகின்ற நெருக்கடியினை அடையாளம் கண்டுகொள்ள இப்பரிசோதனை சூத்திரமானது மிகவும் வெற்றிகரமாக செயல்படக் கூடியது.

நாம் எல்லோரும் நாம் தழுவியுள்ள சமயத்தையும், இனத்தையும் என்றும் நேசிக்கிறோம். எம்மை போன்ற கருத்துக்களை பரிமாறுகின்றவர்கள் சிலவேளை எமது இனத்தையோ, சமயத்தையோ சார்ந்தவராக இல்லாவி டினும் நாம் அவர்கள் குறித்து மகிழ்ச்சியடைவதுடன் அவர்களின் கருத்துக்ளை வரவேற்கின்றோம். இது இயல்பானது என்பதுடன் அதில் தவறொன்றும் இல்லை. இருப்பினும், தனது சமயத்தை சார்ந்தவராகவோ, இனத்தை சார்ந்தவராகவோ இல்லாத நிலையில் அவர்களை வெறுப்பதும் அல்லது ஒரேவாறான கருத்தினை பரிமாறாமல் இருப்பதும் என்பவைதான் இங்கு ஆழ்ந்து கவனிக்கப்பட வேண் டிய விடயங்களாக உள்ளன. இந்த இடத்திலேயே வெறுப்பு என்பதன் மூல காரணிகள் அதன் வேலையைக் காட்டத் துவங்குகின்றன. வெறுப்பு என்பது எமது அறியாமையிலிருந்து உற்பத்தியாகின்ற பொருள்.

அத்துடன் அவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே நேர்த்தியாக வளர்கின்றன. அதாவது, வெறுப்பு என்பதும் அறியமையுடன் சேர்ந்தே வளர்கின்றது. அதேவேளை, எமக்குள் ஏற்படுகின்ற அச்சத்தினாலும் வெறுப்பு என்பது அதிகரிக்கின்றது. அத்தகைய அச்சத்தில் மூன்று பிரதான வகைகள் உண்டு. தெரியாமையினால் வெளிவருகின்ற அச்சம், இருப்பிற்கு உத்தரவாதம் இல்லை என வரும் அச்சம் மற்றும் உரிமையை இழந்துவிடுவோமோ என வரும் அச்சம். குறிப்பிட்ட சமூகத் தில் தமது சொந்த நலனை மட்டும் அடிப் படையாகக் கொண்டு செயற்படுகின்ற அரசியல்வாதிகள், வெளிநாட்டு அதிகார வர்க்கங்கள், வியாபார முதலீட்டாளர்கள், சமயத் தலைவர்கள் அல்லது ஏனைய நபர்கள் குறிப்பிட்ட சமுதாயத்தில் இத்தகைய அச்சத்தினை தோற்றுவிப்பதில் அரும்பங்காற்றுகின்றனர். பொறுப்பற்ற ஊடகங்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படுகின்ற இத்தகைய நடவடிக்கைகள் நாட்டின் வளர்ச்சிக்கு தடங்கலாக அமைந்து விடுகின்றன.

விடயத்தினை எப்படி விளங்கிக் கொள்ள வேண்டுமோ அவ்வாறு விளங்கிக் கொள்ளத் தவறுவதே அறியாமையாகும். இது மனிதனை தப்பெண்ணம் கொள்ளச் செய்கின்றது. உண்மையில் யதார்த்த நிலையினை கருத்தில் கொள்ளாது மேற்கொள்கின்ற அவசர முடிவுகளே பல்வேறு பிரச்சினைகளுக்கு மூல காரணமாக அமைந்துவிடுகின்றது. சில மனிதர்கள் ஏனைய கலாசாரங்கள் குறித்தோ, அவைகள் கொண்டுள்ள அம்சங்கள் குறித்தோ, அவர்களுடைய நம்பிக்கைகள் குறித்தோ ஒருபோதும் அறிவூட்டப்படுவது கிடையாது. மனிதனுடைய செயல்களும், அதன் எதிர் விளைவுகளும் அவனுக்கு கிடைக்கப் பெறுகின்ற செய்திகளின் அடிப்படையில் அமைந்தவை. அவை சிலவேளைகளில் நம்பகரமானதாக இருப்பதில்லை. இத்தகைய செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து உறுதி செய்து கொள்ளாத நிலையிலேயே அறியாமை தோன்றுகின்றது.

மக்கள் தாங்களாக ஒரு நியதியினையும், முடிவினையும் எடுத்துக் கொண்டு அதன்படி எல்லாவற்றையும் தீர்மா னிக்க முயல்வது அறியாமையில் ஒருவகையாகும். உதாரணமாக, மதித்து நடப்பது என்பது அதனை பின்பற்றுவது என்று பொருளல்ல. மாறாக அதன் இருப்பினை ஏற்றுக்கொள்வதாகும். ஒருவர் இஸ்லாத்தினை நம்பி ஏற்றுக்கொள்ளும் வரை ஒரு முஸ்லிமாக இருக்க முடியும், இதே நிைலமை புத்த சமயமாக, கிறிஸ்துவ சமயமாக இருப்பினும், ஏனைய சமயங்களுக்கும் பொருந்தும். ஆனால், மக்கள் தம்முடைய செயற்பாடுகளை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இது ஒருபோதும் நிகழாது என்பதுடன் சமயத்தை பின்பற்றுபவர்களுக்கு இடையில் முரண்பாடுகளை வீணாக தோற்றுவிக்கும். ஒரு சமயத்தை மதித்து நடப்பது என்பது அதன் கொள்கை கோட்பாடுகளை பின்பற்றுவதாக அமையாது. ஆனால் அவ்வாறான ஒரு சமயம் மக்கள் மத்தியில் பழக்கத்தில் உண்டு என்பதனையும், அவர்களுடைய சமய பழக்கவழக்கங்களை அவர்கள் மேற்கொள்வதனையும் ஏற்றுக் கொள்கின்றது.

மறுபக்கத்தில் நல்லது என்பதும், சரி என்பதும் இரு வேறுபட்ட சொற்கள். அதன் அர்த்தமும் வேறு என்பதனை உணர்ந்து கொள்ள சிலர் தயாரில்லை. எந்தவொரு சமயமும் மற்றயவர்களுக்கு அநீதி இழைக்கும்படியாக கூறவில்லை. இந்த நிலையில் சமயங்கள் யாவும் நல்லவை. ஆனாலும், நாம் ஒவ்வொருவரும் வேறு வேறு சமயங்களை பின்பற்றுவது ஏனெனில் நாம் பெற்றுக் கொண்டுள்ள செய்திகள் எமது நம்பிக்கையின் அடிப்படையில்  சரியானது என்பத னாலாகும். ஏனையவர்கள் கூட அவர்களுக்கு கிடைத்த செய்திகளின் அடிப்படையில் அவர்களுடைய நம்பிக்கை சரியானது என நம்புவதற்கு பூரண உரிமையுடையவர்கள் என்பதனை நாம் அவசியம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அர்த்தமுள்ள கலந்துரையாடல்கள் மூலம் எது சரி, எது பிழை என்பதனை புரிந்து கொள்வதும், தெளிந்து கொள்வது ஒவ்வொரு தனிநபரையும் பொறுத்தது. சுருக்கமாக சமயத்தில் எதுவித பலவந்தமோ கட்டாயப்படுத்தலோ கிடையாது.

தனிநபர்கள் செய்கின்ற குற்றத்தினை சமுதாயத்தின் மீது பழிசுமத்துவதன் மூலமாக மொத்த சமுதாயத்தினையே நாசப்படுத்துவது அறியாமையின் இன்னொரு வகை. எந்த சமுதாயத்தில் கொள்ளையர்களோ, கொடுமைக்காரரர்களோ, கொலையாளி களோ, ஏமாற்றுக்காரர்களோ இல்லாமல் இருக்கிறார்கள் என நாம் எப்போவாவது சிந்தித்திருக்கிறோமா? எந்த சமூகத்தாரில் இருந்து இந்த குற்றவாளிகள் தோன்றுகிறா ர்களோ அச்சமுதாயத்தினை நாம் பச்சை குத்தலாமா? இதன் மூலம், குற்றவாளிகளை குறிப்பிட்ட சமூகத்தில் இருந்து வேறு பிரித் தறிய முடியாமல் மக்கள் அறியாமையில் இருக்கிறார்கள் என்பதனை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
பொதுவான ஒரு சமூகத்தில், நல்ல மக்களும், தீய மக்களும் இருக்கிறார்கள் என்பதனை உணர்ந்து கொள்ளாமல் இருப்பது அறியாமைதானே? இத்தகைய அறியாதவர்கள், கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட கொடு மைகளை மீண்டும் மக்களுக்குள் ஞாபகப்படுத்தி, தற்கால சமூகத்தின் மீது பழியினை சுமத்திவிடுகின்றனர். இன்று பல்வேறு நபர்களும் தமது சுய இலாப நோக்கத்துக்காக இத்தகைய பழைய சம்பவங்களை மக்கள் மத்தியில் நினைவூட்டி அவர்களின் உணர்ச்சிகளை தூண்டிவிடும் நிகழ்வுகளை அவதானிக்கின்றோம். இவர்கள் தம்மை சீர்திருத்தவாதிகளாக காட்டிக் கொண்டாலும் அவர்களால் இந்த நாட்டுக்கு கேடுதானே ஒழிய வேறில்லை.

இந்த விளக்கத்துடன் இனவாத விசமிகளாக இருக்கும் இவர்கள் தங்களை சீர்திருத்தவாதிகள் என எவ்வளவு காலத்திற்கு வெளிக் காட்டிக்கொள்ள முடியும் என அவதானிப்போம்.

அடுத்து, அறியாமை என்கின்ற பட்டி யலில் உள்ள விடயம் யாதெனில், குறிப்பிட்ட சமுதாயத்தினை வலுக்கட்டா யமாக தமது காலடியின் கீழ் விழச் செய்ய முடியும் என நம்புவதாகும். இத்தகைய காரணத்தின் அடிப்படையிலேயே இவர்கள் மற்றயவர்களுக்கு எதிராக குரோதங்களை உருவாக்கிவிடுகின்றனர். மக்களுடைய சொத்துக்களையும், உடமைகளையும் பலவந்தமான நடவடிக்கைகள் மூலம் இலகுவாக பறித்துவிடலாம் என அவர்கள் நம்புகின்றார்கள். உலக வரலாற்றில் இற்றை வரை பல்வேறு நாடுகளும் இத்தகைய எண்ணத்துடனேயே ஏனைய நாடுகளை ஆக்கிரமித்தன. ஆனால் ஈற்றில் நடந்தது ஒன்றும் கிடையாது. மக்கள் அவர்களுக்கு சொந்தமானதும், உரித்தானதுமான ஒன்றை அவ்வளவு சுலபமாக கைவிட்டு விடுவார்களா என்கின்ற உண்மையினை அவர்கள் உணர்ந்துகொள்ள தவறிவிட்டனர் என்பதுதான் வெளிப்படையான விடயம்.

இதேவேளை, மக்களை துன்புறுத்தும் வகையில் நடந்தேறுகின்ற நிகழ்வுகள் யாவும் சில சமூக விரோத போக்குள்ள நபர்களினால் தமது சொந்த இலக்கு களை அடைந்துகொள்ளவே முன்னெடுக்கப் படுகின்றன. இத்தகைய நிலையினை நாம் எமது நாட்டிலும் தற்போது அவதா னிக்க முடிகின்றது. உதாரணமாக, 1983 களில் ஏற்பட்ட கலவரத்தினால் விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததே அன்றி இம்மியளவும் குறையவில்லை. மக்கள் அறவிலிகளாக அல்லாமல், பிரச்சினைகளை தெளிவாக விளங்கி நடப்பார்களேயானால் இந் நிைலமைகள் தோன்றாது. மக்கள் தெளிவானவர்களாக தம்மை முற்படுத்திக் கொள்ள வேண்டுமாக இருந்தால் அடக்குமுறையாளர்களை தமது காலுக்குக் கீழ் வைத்து அளவிடுபவர்களாக மாற வேண்டும். அப்போது, இந்த அநியாயக்காரர்கள் தொடர்ந்தும் அட்டூழியங்களில் ஈடுபடுவார்களாக இருந்தால் என்ன நடக்கும்?

குரோத சிந்தனையும் அடக்குமுறைகளும் சமயங்களினால் போதிக்கப்படுகிறது என்பதாகவும், இதனால் சமய நம்பிக்கையை மக்களிடம் இருந்து அடியோடு ஒழிப்பதன் மூலம் மக்களுக்கு இடையில் ஒற்றுமையை தோற்றுவிக்கலாம் என்ற தீர்வுக்கு சிலர் முன்வருகின்றனர். எனது கருத்தில் இத்தகைய விளக்கங்கள் உண்மையை உதறிவிட்டு எடுக்கப்படுகின்ற தீர்மா னங்கள் என்பதனால் அறியாமையின் வெளிப்பாடாகவே இருக்கிறது. மக்கள் சமயங்களை பின்பற்றுவதன் மூல நோக்கமே வாழ்வு என்றால் என்ன? மரணத்தின் பின்னரான வாழ்வு? உலகமும் அதன் அண்ட சராசரங்களும் எப்படி உருவானது? போன்ற கேள்விகளுக்கு பதிலை தேடியே. இத்தகைய விடைகாணாத கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொருட்டே மக்கள் சில கொள்கைகளை நம்புகின்றனர். எந்த சமய நம்பிக்கைகளையும் பின்பற்றாத வர்களும் பல்வேறு அநியாயங்களை இழைத்திருப்பதனை நாம் வரலாற்றில் காண்கின்றோம். ஒருவர் சமய நம்பிக்கை யாளராக இருப்பதுவும் அல்லது அதனை நம்பாதவராக இருப்பதுவும்
அவ­ரவர் தனிப்­பட்ட தெரிவு. எவரொ ருவர் சம­யங்­களில் நம்­பிக்கை கொள்­ளா­த­வ­ராக இருக்­கின்­றாரோ அவரும் ஏனைய சம­யங்கள் அல்­லது இனம் போன்­ற­தொரு தனித்­தன்­மை­யான குழுவில் அங்­கத்­தவ ராகின்றார். அத்­த­கைய குழு­வி­லேயே எல்­லோரும் அங்கம் வகிக்க வேண்டும் என எதிர்­பார்ப்­பது மற்­று­மொரு வகை­யான அறி­யா­மை­யாகும்.

மக்கள் மத்­தி­யி­லுள்ள அறி­யா­மை­யினை கல்வி நட­வ­டிக்­கை­யினால் மட்­டுமே ஒழித்துக் கட்ட முடியும். நான் இங்கு மருத்­துவக் கற்கை நெறி பற்­றியோ, பொறி­யியல் கற்கை நெறி பற்­றியோ குறிப்­பி­ட­வில்லை. இவை அவ­சி­யம்தான். ஆனால் போது­மா­ன­தல்ல. இவை போது­மா­ன­தான இருந்­தி­ருந்தால் தத்­து­வ­மேதை பட்டம் பெற்ற எனது நண்­பரை மனி­தர்­களை விளங்­கிக்­கொள்ளும் வகையில் அது மாற்­றி­யி­ருக்க வேண்­டுமே! ஏனைய வர்­களின் நம்­பிக்­கை­களை மதித்து நடக்­கவும், விளங்கி நடக்­கவும் தேவை யான கல்வி முறையே தேவை யானது. ஒவ்­வொரு தனி மனி­தனும் தான் ஒரு தீர்­வுக்கு வர முன்­ப­தாக ஆதா­ர­பூர்­வ­மான அடிப்­ப­டை­களின் மூல­மாக சமூக விட­யங்­களை கற்­றுக்­கொள்ள வேண்டும். இதன் மூலம் மக்­களின் மனங்­களில் வேரூன்­றி­யுள்ள தவ­றான கோட்­பா­டு­க­ளையும், அறி­யா­மை­யி­னையும் ஒழித்­து­விட முடியும்.

இங்கே படத்தில் காட்­டப்­பட்­டுள்­ள­வாறு, “அச்சம்” என்­கின்ற மூலமே அறியா மையை அதி­க­ரிக்கச் செய்து வெறுப் பினை உண்­டாக்­கி­வி­டு­கின்­றது. தெரி­யா­மை­யினால் எழு­கின்ற அச்சம், பாது­காப்­பின்­மை­யிiனால் எழு­கின்ற அச்சம் மற்றும் உரி­மை­களை இழந்­து­வி­டு­வோமோ என்­ப­தனால் எழு­கின்ற அச்சம் என்­பவை மூலமே பெரும்­பாலும் இந்­நிை­லமை ஏற்­ப­டு­கின்­றது. பல்­வேறு நபர்கள் தமது சுய இலா­பங்­க­ளுக்­காக சந்­தர்ப்­பத்­தினை எதிர்­பார்த்து காத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்­ப­துடன் அவர்­க­ளு­டைய நலன்­களை கருத்திற் கொண்டு பொய்­யான செய்­தி­களை பரப்­பவும், ஒற்­று­மை­யினை குலைக்­கவும் திட்­டங்­களை தீட்­டு­கின்­றனர். அர­சியல் என்­பது ஒரு வலு­வான முகா­மைத்­துவக் கட்­ட­மைப்­பாகும். நாடு எல்லா வகை­யிலும் அபி­வி­ருத்தி அடைய வேண்­டு­மானால் அதன் அர­சியல் வாதிகள் நீதி­யா­ன­வர்­க­ளாயும், நடு­நி­லை­யா­ன­வர்­க­ளாயும் இருத்தல் அவ­சியம்.

இலங்கை ஜன­நா­யக நாடு என்ற வகையில் ஏனைய நாடு­களைப் போன்று சில சாதக நிலை­க­ளையும், பாதக நிலை­க­ளையும் கொண்­டுள்­ளது. பாத­க­மான நிலை என்­கின்ற போது, சில அர­சி­யல்­வா­திகள் தமது வாக்கு வங்­கி­களை அதி­க­ரித்துக் கொள்­வ­தற்­காக மக்கள் மத்­தியில் பிரி­வி­னையை உரு­வாக்க முயல்­கின்­றனர். இதே­வேளை, ஆளு­கின்ற உயர் வர்­கத்­தினர் விடு­கின்ற பிழை­களை மக்கள் கண்டு கொள்­ளாமல் தவிர்க்­கவும், அவர்­களை திசை­தி­ருப்பும் நோக்­கிலும் இன­வா­தத்­தினை ஏற்­ப­டுத்தி தங்­களை மறைத்துக் கொள்­கின்­றனர். இவர்கள் தங்களுடைய நலன்களை முதன்மைப்படுத்துவது போன்று மக்கள் சமாதானமாகவும், பாரபட்சம் இன்றியும் வாழ்வதற்கு தேவையான பொது நலன்கள் குறித்து ஒரு போதும் சிந்திப்பது கிடையாது. இத்தகைய சுய நலன் கொண்ட அரசியல்வாதிகளே ஒரு நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலாகும்.

நன்றி : விடிவெள்ளி

No comments