Breaking News

முஸ்லிம் என்ற வகையில் ஆயுதம் ஏந்தும் அமைப்புக்கு ஆதரவு இல்லை: அசாத் சாலி

azath-salley ஆயுதம் ஏந்தும் அமைப்புக்கு உதவியளிக்கப் போவதாக தாம் ஒருபோதும் கூறவில்லை என கொழும்பு மாநகர முன்னாள் பிரதிமேயர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

எனினும் தமிழகத்தில் இருந்து வெளியாகும் ஜூனியர் விகடன் சஞ்சிகை தம்மை பிழையாக, தமது செய்தியில் கோடிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலையாவதற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அனுப்பிய சத்தியக்கடதாசியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தாம் கூறியதாக ஜூனியர் விகடன் வெளியிட்ட செய்தி பிழையானது. இதற்கு மறுப்பு தெரிவிக்க தாம் அந்த சஞ்சிகையிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார்

ஒரு முஸ்லிம் என்ற வகையில், இலங்கையில் ஆயுதம் ஏந்தும் எவருக்கும் ஆதரவளிப்பதாக தாம் ஆலோசனை வழங்கப் போவதில்லை என்று சாலி சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் இறையான்மைக்கு ஒருபோதும் ஊறுவிளைவிக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், தமது கருத்து என்று கூறப்பட்டு வெளியான செய்தியால் எவருக்கும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தால் அதற்கு கவலை தெரிவிப்பதாகவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவின் முன்னணி அமைப்பு ஒன்று விடுத்திருந்த அழைப்பை ஏற்று தாம் மாநாடு ஒன்றில் பங்கேற்றதாக கூறியுள்ள அசாத் சாலி, அந்த அமைப்பு குறித்து முன்னதாக தாம் எந்த அறிவையும் பெற்றிருக்கவில்லை என்றும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

No comments