13ம் திருத்தத்தை ரத்து செய்யாது வட மாகாணசபைத் தேர்தலை நடாத்த இடமளிக்கப் போவதில்லை!– பொதுபல சேனா
13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யாது வட மாகாணசபைத் தேர்தலை நடாத்த இடமளிக்கப் போவதில்லை என பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது.
ஏதேனும் சந்தர்ப்பத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் ஆயிரக்கணக்கான மக்களை இணைத்துக் கொண்டு வீதியில் இறங்கி போராட்டம் நடத்த நேரிடும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலபொட்ட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் தங்கியிருந்த அனைத்து சிங்களவர்களையும் மீள் குடியேற்றாது எந்தவொரு சக்திக்கும் தேர்தல் நடத்த இடமளிக்கப்போவதில்லை.
மாகாணசபை முறைமையை ரத்து செய்யாது மீளவும் வடக்கில் தேர்தல் நடாத்துவது மீளவும் ஈழத்தை உருவாக்க வழியமைக்கும்.
13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரும் சக்திகளுடன் கைகோர்த்துக்கொண்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
தற்போது பதவி வகிக்கும் முதலமைச்சர்கள் மற்றும் மாகாண அமைச்சர்கள் நாட்டை நேசித்தால் 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரி வீதியில் இறங்கி போராட்டம்; நடத்த வேண்டுமென கலபொடஅத்தேஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
No comments