இலங்கையில் சுதந்திரத்தை இழந்த ஒரே இனம் சிங்கள இனம் - அக்மீமன தயாரத்ன தேரர்
விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்திடம் இருந்து மீட்கப்பட்ட இலங்கையில் சுதந்திரத்தை இழந்த ஒரே இனம் சிங்கள இனம் எனவும் அவர்களுக்காக குரல் கொடுப்பதற்காகவே சிங்கள ராவய என்ற அமைப்பை ஏற்படுத்தியதாக அந்த அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
தெஹிவளையில் நடைபெற்ற சிங்கள ராவய அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். சிங்கள ராவய என்ற அமைப்பு சிங்களவர்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்பாகும். சிங்கள இனம் என்பது பாதிக்கப்பட்ட இனமாகும்.
தற்போது 62 வீத சிங்கள மக்களே இலங்கையில் வாழ்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை இன்னும் 10 வருடங்களில் 40 வீதமாக குறைவடையும். இதன் மூலம் சிங்களவர்கள் இலங்கையில் சிறுபான்மையினமாக மாறி விடுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments