Breaking News

பொது பல சேனாவைத் தடைசெய்…

Bodu-Bala-Sena (1)பொது பல சேனா ஒரு பயங்கரவாத இயக்கமென்பதால் அதனை உடனடியாக தடை செய்யும்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தென் மாகான சபை உருப்பினர் மேஜர் அஜித் பிரசன்ன அவர்கள் கூறியுள்ளார்.

 

அந்த சேனா இந்த சேனா என்று சொல்லிக் கொண்டு தேசிய ஒற்றுமையை சீர்குழைக்கவும் இந்த நாட்டை அராஜக நிலைக்குத் தள்ள இவர்கள் செயற்படுகின்றனர்.  இப்படியான ஒரு கூட்டம் இருக்கும் போது நாம் எவாறு ஒற்றுமையாக ஆசியாவின் ஆச்சரியம் எனும் இலக்கை அடைவது? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

திரு அஜித் பிரசன்ன அவர்கள் நேற்று முன் தினம் (9ஆம் திகதி) இடம்பெற்ற தென் மாகான சபையின் மாதாந்த கூட்டத்தின் போதே இவ்வாறு கருத்து வெளியிட்டார். முதல்வர் திரு சோமதாச கோதாகொட அவர்களின் தலைமையில் காலி கலேகான மாகான சபை கேட்போர் கூடத்தில் இந்த கூட்டம் இடம்பெற்றது.

 

நாம் இப்போது பிரிந்துள்ளோம். பொது பல சேனா கூறுகிறது இலங்கையின் சில காவியுடை அனிந்தோர் தேசிய ஒற்றுமைக்க்ய் குரல் கொடுப்பதில்ல என்று.  பொது பல சேனாவை தடை செய்யுங்கள். இவர்கள் ஒரு பயங்கரவாதக் குழு, உடனடியாகத் தடை செய்யுங்கள் என்று திரு பிரசன்ன அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.

 

(මව්බිම Online இல் வெளியான செய்தியின் தமிழாக்கம்)

 

No comments