முஸ்லிம் வேட்டை தொடர்ந்தால் விளைவு கடுமையாக இருக்கும் : அசாத் சாலி
முஸ்லிம்களுக்கு எதிரான வேட்டையை ஆரம்பிதால் தமிழர்களை வேட்டையாடிய போது இருந்ததி விட முற்றிலும் வித்தியாசமான ஒரு பயங்கரமான முடிவுகளை சந்திக்க நேரிடும் என தேசிய ஐக்கிய முண்ணனியின் பொதுச் செயளாலர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
தமிழர்களை வேட்டையாடி முடிந்ததும் இப்போது உள்ள் பிரச்சினை அனைத்தையும் முஸ்லிம்களின் மீது போட்டு, முஸ்லிம் வேட்டையை ஆரம்பிக்க வேண்டாம் எனவும், அல் கைதா, ஜிஹாத் போன்ற அமைப்புகள் இலங்கையில் இல்லை என்றும் அவர் கூறினார்.
அசாத் சாலி அவர்கள் மேலும் கூறியதாவது, முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், பள்ளிவாசல்களை தாக்குதல் போன்ற விடயங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு வேளைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளேன். முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று பொதுபல சேனா கூறி வருகிறது. நாம் அரசாங்கத்துக்கும் பொதுபல சேனாவுக்கும் கூறிக்கொள்வது, இந்த நாட்டில் சட்டம் உள்ளது, நீதி மண்றங்கள் உள்ளன, பாதுகாப்புப் பிரிவொன்று உள்ளது இவற்றின் மூலம் உரிய விதத்தில் சோதனைகளை மேற்கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுங்கள். பொது பல சேனா திட்டமிட்டு முஸ்லிம்களுக்கும், பள்ளிவாசல்களுக்கும் தாக்குதல் நடாத்தி வருகிறது இவற்றுக்கு எம்மிடம் சாட்சியங்கள் உள்ளன. இவற்றை முன்வைத்து சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று மேலும் அவர் கூறினார்.
No comments