Breaking News

அரசாங்க தகவல் திணைக்களத்தின் இணையத்தளமும் முடக்கம்

Kurdish_hack_001 அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமானwww.news.lk  இனந்தெரியாத நபர்களினால் நேற்றைய தினம் (காலை 11.50 மனியளவில்) முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படித் தகவலை அரசாங்க திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சுல்தான் பிரையின் Sultan Brain எனும் குழுவே இவ் ஹெக்கிங் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிகின்றது. இவர்கள் தங்களை (kurdish elite security team) என அறிமுகப்படுத்திக்கொள்கின்றனர்.

sinhala.news.lk, webcast.news.lk, webcast.news.lk ஆகிய தகவல் தினைக்களத்தின் துணை இனையத்தளங்களும் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன. தற்போது இவை வளமைக்கு திரும்பியுள்ளது.

இலங்கையின் அரச இனையத்தளங்கள் மீது தொடர்ந்து இவ்வாறான ஹெக்கர் தாக்குதல்கள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. இவை அடைத்தும் இஸ்லாத்தை இழிவு படுத்திமை தொடர்பாகவே ஹெக்செய்தோம் என குறித்த ஹெக்கர்கள் கூறியுள்ளனர்.

 

(TW)

No comments