ஜெய்லானி பள்ளிவாசலுக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று இன்று அகற்றப்படுகிறது
ஜெய்லானி பள்ளிவாசல் அமைந்துள்ள கூரகல பிரதேசம் தொல்பொருள் வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து பள்ளிவாசலுக்குச் சொந்தமான சட்டவிராத கட்டிடங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ள கட்டிடங்களை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
இந் நடவடிக்கையின் கீழ் இன்று வெள்ளிக்கிழமை பள்ளிவாசலுக்குச் சொந்தமான பழைய கட்டிடமொன்று அகற்றப்படவுள்ளது. பள்ளிவாசல் பரிபாலன சபையின் இணக்கத்துடனேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவி பெரோசா அபுசாலி தெரிவித்தார்.
அண்மையில் பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் மற்றும் முஸ்லிம் கவுன்சில் அகில இலங்கை ஜம்-இய்யத்துல் உலமா சபை பிரதிநிதிகள், பெளத்த குருமார்களுக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளுக்கமையவே தொல்பொருள் திணைக்களம் இம்முயற்சியில் இந் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.
இம்மாத இறுதிக்குள் பள்ளிவாசலுக்குச் சொந்தமான சட்டவிராத கட்டிடங்கள் அகற்றப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(VD)
Post Comment
No comments