இலங்கையில் கொமன்வெல்த் உச்சி மாநாடு - ஐ.நா நிபுணர்களில் ஒருவர் விமர்சனம்!
இலங்கையில் சித்திரவதைகள், காணாமற்போதல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும், கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டுக்கு அந்த நாடு தலைமை தாங்கவுள்ளது குறித்து ஐ.நா அதிர்ச்சி வெளியிட்டுள்ளது. இறுதிப்போரின்போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக, விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐ.நா நிபுணர்களில் ஒருவரான தென்னாபிரிக்காவைச் சேர்ந்த யஸ்மின் சூகாவே இந்த அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார்.
அவுஸ்ரேலியாவின் ஏபிசி வானொலிக்கு அளித்துள்ள செவ்வியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
சிறிலங்கா அரச, தனது சொந்த மக்களுக்கு எதிராக உரிமைசார்ந்த மீறல்களை இன்னும் நடாத்திவருகிறது. மக்கள் தொடர்ந்து சித்திரவதை செய்யப்படுகின்றனர், காணாமற்போகின்றனர். போர்க்குற்றங்கள் விசாரிக்கப்படாவிட்டால், சிறிலங்காவில் நடைபெறும் கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக கனடா கூறியுள்ளதை நான் பாராட்டுகின்றேன்.
"சிறிலங்கா அரசு மனித உரிமை வி்டயத்தில் எந்த நடவடிக்கையையும் எடுக்கா விட்டால், கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டை அங்கு நடத்த அனுமதிக்கக் கூடாது. அவுஸ்ரேலியா உள்ளிட்ட, ஏனைய நாடுகள் தாம் மாநாட்டில் பங்கேற்போம் என்று பலவீனமான முறையில் கூறியுள்ளமை ஆச்சரியமளிக்கிறது. அவுஸ்ரேலியா குறித்து எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments